IPL 2023 : இந்த காலத்துலயுமா இப்டி சுயநலமா விளையாடுவீங்க? அவர பாத்து கத்துக்கோங்க – விராட் கோலியை விமர்சித்த மைக்கேல் வாகன்

vaughan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் லட்சிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3வது வெற்றிகளை பதிவு செய்து போராடி வருகிறது. முன்னாதாக 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் ஒரே அணிக்காக விளையாடி சாதனை படைத்து அதிக ரன்கள் குவித்த வீரராக வரலாறு படைத்து பெங்களூருவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கேப்டனாக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனங்களை நிறுத்துவதற்காக கடந்த வருடம் அந்தப் பதவியை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடினார்.

Simon-Doull-and-Kohli

- Advertisement -

ஆனாலும் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்து வந்த அவர் 2 கோல்டன் டக் அவுட்டாகி சுமாராக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் சமீபத்தில் ஃபார்முக்கு திரும்பி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 279 ரன்கள் குவித்து வரும் அவர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஒரு சில போட்டிகளில் அதிரடியான துவக்கத்தை பெற்று 40 ரன்கள் தொட்டதும் 50 ரன்களை தொட வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடிய அவர் சாதனைக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக முன்னாள் நியூஸிலாந்து வீரர் சைமன் டௌல் கடுமையாக விமர்சித்தார்.

இந்த காலத்துலயுமா:
அதே போல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டு பிளேஸிஸ் சுயநலமின்றி 84 (56) ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி மட்டும் 59 (47) ரன்களை எடுத்து மெதுவாக விளையாடியதாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தார். குறிப்பாக 40 ரன்களை தொட்டதும் 50 ரன்களை தொடுவதற்காக விராட் கோலி தொடர்ந்து மெதுவாக விளையாடி வருவதாக அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் தான் வெற்றி காண முடியும் என்ற இந்த நவீன டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலி பெரும்பாலும் மெதுவாக விளையாடுவதாக முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

Virat Kohli Sanjay Manjrekar

குறிப்பாக திறமை இருந்தும் மெதுவாக விளையாடுவதால் அக்கறையுடன் இதை தெரிவிப்பதாக கூறும் அவர் அதிரடியாக விளையாடுவதை சுப்மன் கில் போன்ற தற்போதைய இளம் வீரர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அழகான வீரர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் மீது எனக்கு எந்த சந்தேகமில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்த நவீன யுகத்தில் அவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் இன்னும் சற்று ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“நிறைய இந்திய வீரர்கள் நிறைய பந்துகளை எதிர்கொண்டு விளையாடுகிறார்கள். ஆனால் நவீன கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் அதிரடியாக விளையாட வேண்டும். ஏனெனில் இப்போதுள்ள அணிகளில் கிட்டத்தட்ட 9 – 10 வரை அல்லது சில நேரங்களில் 11 வீரர்களும் பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். முன்பெல்லாம் முதல் 6 ஓவர்களில் 50 ரன்கள் எடுப்பது நல்ல தொடக்கமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது விளையாடும் கிரிக்கெட்டில் நீங்கள் அதே சமயத்தில் 70 ரன்கள் எடுப்பது வெற்றிக்கு அவசியமாகிறது. ஒருவேளை நான் இந்திய அணியில் ஒருவராக இருந்தால் சுப்மன் கில் போன்ற பயமற்ற அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களை பார்த்து கற்றுக் கொள்வேன்”

Vaughan

“மேலும் கேஎல் ராகுல் 4வது கியரில் விளையாட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். விராட் கோலி சிறந்த வீரர் என்பதால் என்னைப் போலவே சிலர் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்துள்ளார்கள். ஏனெனில் எளிதாக அவரால் தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க முடியும்”

இதையும் படிங்க:LSG vs GT : இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க? கிங் கோலியை மிஞ்சி வெற்றிக்கு உதவாத சாதனை படைத்த ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்

“எனவே இது விமர்சனம் கிடையாது. அவரால் முடியும் என்ற நம்பிக்கையில் நான் சொல்வதாகும். ஒருவேளை நான் அவராக இருந்தால் சில இளம் வீரர்களை பார்த்து கற்றுக் கொள்வேன். குறிப்பாக சுப்மன் கில் அதிவேக ரயில் போல சேசிங் செய்வதை பார்த்து விளையாடுவேன்” என்று கூறினார்.

Advertisement