இந்திய அணியின் சென்னை டெஸ்ட் தோல்வியை கிண்டல் செய்து ரசிகர்களிடம் வாங்கிய கட்டிய – மைக்கல் வாஹன்

Vaughan
- Advertisement -

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியை டிவிட்டரில் கிண்டலடித்து பதிவிட்ட முன்னாள் வீரர் மைக்கல் வாகனுக்கு ரசிகர்கள் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா அபாரமாக வென்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியவை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தன்னுடைய 100-ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடினார்.

root 1

- Advertisement -

அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய வீரர்கள் தங்களது கையெழுத்து இடப்பட்ட ஜெர்சியை லயனுக்கு பரிசளித்தனர். மைக்கல் வாகன் இதை ஒப்பிட்டு ஜோ ரூட்டும் தனது 100ஆவது போட்டியை இந்தியாவுடன் தற்பொழுது ஆடியுள்ளார் அவருக்கு ஏன் ஜெர்சி தரவில்லை என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “காபாவில் டெஸ்ட் போட்டியை வென்ற பின்பு நாதன் லயனுக்கு கையெழுத்திட்ட ஜெர்சியை 100-ஆவது டெஸ்டுக்கு பரிசாக இந்திய அணி வீரர்கள் அளித்தனர். அதேப்போல ஜோ ரூட்டுக்கும் தங்களது தோல்விக்கு பிறகு தங்களது ஜெர்சியை ஏதும் பரிசளித்திருக்கிறார்களா? இதுபோல எதாவது நிகழ்வு நிகழ்ந்ததா ? யாராவது அதனை உறுதிப்படுத்த முடியுமா?” என மைக்கல் வாகன் நக்கலடித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த டீவிட்டுக்கு கீழ் சிலர் ரஹானே தலைமியலான அணி லயனுக்கு ஜெர்சி கொடுத்தது என்றும் தற்பொழுது கோலி தலைமியலான அணி இருக்கிறது என்றும் அதனாலேயே ரூட்டுக்கு ஜெர்சி வழங்கப்படவில்லை என்றும் சாடியுள்ளனர்.இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் “முதல் போட்டியில்தான் நாங்கள் தோற்று இருக்கிறோம். தொடரை வென்ற பின்பு இந்தியா ஜோ ரூட்டுக்கு பரிசளிக்கும்” என கமண்ட் செய்து வருகின்றனர்.

மைக்கல் வாகன் பதிவிட்டு இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய தொடரின் போதே இந்திய அணிய விமர்சித்து ரசிகர்களின் வார்த்தை வசைபாடலில் சிக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement