இவருக்கு இன்னும் கேப்டன் பதவி வழங்காதது ஏன் என்று எனக்கு புரியல – மைக்கல் வான் காட்டம்

Vaughan
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் வரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்டீவ் ஸ்மித். அந்த தொடரின் போது நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் தடை காலம் நீங்கி மீண்டும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தற்போது சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடுகின்றனர்.

Smith

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பங்கேற்ற வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது வரை தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தடை நீங்கி ஸ்மித் கிரிக்கெட் களத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்தாலும் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படாமல் இருந்துவருகிறது. ஒருநாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கு பின்ச்சும், டெஸ்ட் போட்டிகளுக்கு டிம் பெயின் ஆகியோரும் கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுடன் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஸ்மித் பின்ச் காயம் காரணமாக விளையாடாத போது ஸ்மித்துக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் ஸ்மித்துக்கு ஏன் இன்னும் கேப்டன் பொறுப்பை வழங்கவில்லை ? அவர் பந்தை சேதப்படுத்தி விவகாரத்தில் சிக்கியதை வைத்து அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படாமல் தள்ளிக் கொண்டே வருகிறார்கள் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வான் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Smith

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பின்ச் மற்றும் டெஸ்ட் கேப்டன் பெயின் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக அணியை திறம்பட வழிநடத்தும் வீரர் யார் என்று பார்த்தால் என்னைப்பொறுத்தவரை ஸ்மித் தான் சரியாக இருப்பார். அவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தபோது தனது பேட்டிங்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக விளையாடியவர்.

smith 1

அதுமட்டுமின்றி அவர் ஒரு ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக வழிநடத்த கூடிய திறமை உள்ளவர் அதனால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி தடுமாறும் போது அவர் கையில் கேப்டன்ஷிப் கொடுக்கலாம். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து அவருக்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்படாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என மைக்கல் வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement