இவரை வச்சிக்கிட்டு கொல்கத்தா அணி ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம் – ரசலை கடுமையாக விளாசிய வாகன்

Vaughan
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 205 ரன்களை அடிக்க முடியாமல் இறுதியில் கொல்கத்தா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வீரரான ஆண்ட்ரே ரசல் 20 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் எடுத்தார். அவரை தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை அதுவே அந்த அணியின் தல்விக்கு காரணமாக அமைந்தது.

russell 1

- Advertisement -

இந்நிலையில் அந்த போட்டியில் விளையாடிய ஆண்ட்ரே ரசலின் உடற்தகுதி தற்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. ஏனெனில் அவர் பந்துவீசும் போது ஜேமிசனுக்கு எதிராக அடித்திருக்க வேண்டிய ரன் அவுட் வாய்ப்பை பயன்படுத்த வில்லை. கையில் பந்து இருந்தும் ஓடிச்சென்று அடிக்காமல் வெறுமனவே நின்றிருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் அவரை அடுத்து வரும் போட்டிகளில் சேர்க்கக்கூடாது என தங்களது கருத்துகளை காட்டமாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : ரசல் போன்ற சூப்பர் ஸ்டார் அணியில் இருந்தும் பீல்டிங்கின் போது பந்தை குனிந்து எடுக்காமல் கால்களால் தடுக்கிறார்.

russell

அதுமட்டுமின்றி அவரால் கீழே குனிய முடியவில்லை என்பதுதான் இதில் உண்மை. இப்படிப்பட்ட வீரரை வைத்து கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ரசல் பௌலிங் செய்யும்போது மட்டுமல்ல, பீல்டிங் செய்யும்போது மட்டுமல்ல, பேட்டிங் செய்யும்போது மிகவும் திணறுகிறார்.

russell 2

அதிலும் குறிப்பாக இரண்டாவது ரன்னை அவரால் ஓடி எடுக்க முடியவில்லை. ரன்னிங் செய்ய மிகவும் கஷ்டப்படுகிறார். டி20 கிரிக்கெட்டில் இப்போது உள்ள அனைத்து வீரர்களும் நல்ல பிட்னஸ் உடன் இருக்கும் இந்த வேளையில் ரசலுக்கு தற்போது முழு பிட்னஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என காட்டமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Advertisement