அவரால் பழைய பார்முக்கு வரமுடியாது. டீம்ல இருந்து தூக்குங்க – இந்திய சீனியரை விமர்சித்த மைக்கல் வாகன்

Vaughan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் குவித்தது. இதனால் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 303 ரன்களை குவித்தது.

indvseng

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக ஐந்தாவது நாளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை காரணமாக கடைசி நாளில் ஒரு பந்து கூட வீச படாமல் போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய சீனியர் ஒருவரை விமர்சித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

புஜாராவுக்கு இன்னும் வாய்ப்புகள் ஏன் வழங்கப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. இனிமேலும் அவர் சிறப்பான ஆட்டத்திற்கு வர முடியாது என்றே தோன்றுகிறது. இதனால் இழந்த பார்மை நிச்சயம் அவரால் மீட்டெடுக்க முடியாது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது என புஜாரா குறித்து விமர்சித்துள்ளார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கு ஆண்டில் சதமடித்த புஜாரா அதன் பிறகு இதுவரை சதம் அடித்தது இல்லை மேலும் சமீபத்தில் முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சொதப்பியது மட்டுமின்றி தற்போதைய முதலாவது இன்னிங்சிலும் 16 பந்துகளில் 4 ரன்கள் குவித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement