அவர் சொன்ன மாதிரி அவரு மட்டும் ஓப்பனிங் ஆடுனா பெங்களூரு அணி டாப் டீம் ஆயிடும் – மைக்கல் வாகன் கணிப்பு

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசி போட்டியான 5வது போட்டி டிசைடர் போட்டியாக அமைந்தது.அதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி மிகப் பெரிய அளவில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. ரோகித் சர்மாவுடன் இனைந்து விராட் கோலி ஓபனிங் ஆடினார். மேலும் இருவரும் இணைந்து 9 ஓவர்களில் 94 ரன்களை அடித்து மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய அணி அப்போட்டியில் வெல்ல இந்த தொடக்கமே ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

Rohith-1

- Advertisement -

போட்டி முடிந்த பின்னர் பேசிய விராட் கோலி இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரிலும் ஓப்பனிங் ஆட உள்ளேன் என்றும் , மேலும் வரும் காலங்களில் அணிக்கு தேவைப்பட்டால் ஓப்பனிங் ஆடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் கருத்து மிகச் சிறந்த கருத்தாக பார்க்கிறேன் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். அவர் கூறியது போல ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஓபனிங் வீரராக அவர் களமிறங்கினால் , நிச்சயம் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.சி.பி அணியில் அவர் எந்த இடத்தில் இறங்கி ஆடினாலும் நன்றாக ஆடுவார். எனினும் அவர் ஓபனில் வீரராக களம் இறங்கினால் அது அணிக்கு இன்னும் கூடுதல் பலமாக அமையும். ஏனெனில் ஆர்சிபி அணியில் ஏற்கனவே மிடில் ஆர்டர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. எனவே விராட் கோலி ஓபனிங் இறங்கினால் அணியின் ரன் குவிப்புக்கு நிச்சயம் அவர் கூடுதல் பலம் சேர்ப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

Kohli

ஐபிஎல் தொடரில் ஓபனிங் இறங்கியுள்ள விராட் கோலி இதுவரை 2345 ரன்களை குவித்துள்ளார். அதில் 15 அரை சதங்களும் 5 சதங்களும் அடங்கும். அவரது ரன் அவரேஜ் 47.86 ஆகும் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் விகிதம் 140 ஆகும். மேலும் இந்த வருடம் மிடில் ஆர்டர் வரிசையில் பலம் சேர்க்கும் விதமாக மேக்ஸ்வெல் மற்றும் கிறிஸ்டியன் போன்றவர்களை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli-ABD

மைக்கேல் வாகன் மற்றுமின்றி ஆர்சிபி அணி ரசிகர்களும் விராட் கோலி ஓபனிங் ஆட வேண்டும் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement