இந்தியாவிடம் எல்லா திறமையும் ஆனா அவங்க அங்க ஜெயிப்பாங்கனு எனக்கு தோணல – மைக்கல் வாகன் பேச்சு

Michael-Vaughan
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது நடைபெற்ற ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆனாலும் இந்த இரு தொடர்களை விட இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஏனெனில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்கிற குறையை போக்கி இம்முறை வரலாறு படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கடந்த டிசம்பர் 26-ம் தேதி துவங்கி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

அதன் காரணமாக இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. அதோடு இந்திய அணியின் பந்துவீச்சும் மிகவும் சுமாராக இருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ஆம் தேதி துவங்க உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியை அடுத்து இந்திய அணியின் மீது சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இவ்வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணி குறித்த சில விமர்சனங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் மைக்கேல் வாகன் கூறுகையில் : இந்திய அணியிடம் தற்போதைக்கு தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தும் வீரர்கள் இருக்கிறார்களா? என்று கேட்டால் நான் நிச்சயம் இருக்கிறார்கள் என்று கூறுவேன்.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணியில் உள்ள வீரர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களால் முக்கிய தொடர்களில் வெற்றிபெற முடியவில்லை. என்னை பொறுத்தவரை இந்திய அணியில் அனைவருமே நல்ல அனுபவம் உடையவர்களாகவும், சிறப்பான வீரர்களாகவுமே இருக்கின்றனர். ஆஸ்திரேலியா மண்ணில் கூட அவர்கள் இருமுறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 3 கேப்டன்கள் வந்தும் ஜெயிக்க முடியலையே.. அது தான் கிங் கோலி.. முக்கிய புள்ளிவிவரம் இதோ

ஆனால் தென்னாப்பிரிக்க மண்ணில் அவர்களால் நிச்சயம் தொடரை கைப்பற்ற முடியாது என்றே நினைக்கிறேன். முதல் போட்டியை போன்று இரண்டாவது போட்டியிலும் நிச்சயம் இந்திய அணி தடுமாற்றத்தை சந்திக்கும் என்னை பொறுத்தவரை இந்திய அணி அங்கு ஜெயிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement