அஷ்வின் டீம்ல விளையாடனுனா இவர்தான் வெளியேறனும் – மைக்கல் வாகன் ஓபன்டாக்

Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஆனது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இனிவரும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி நிச்சயம் ஆதிக்கம் செலுத்தி இந்த தொடரை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆகஸ்ட் 25 லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ind

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறுவார் என்று தெரிகிறது. ஏனெனில் முதல் 2 போட்டிகளிலும் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட அஸ்வினுக்கு ஆதரவாக ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

அஸ்வின் வெளியில் அமரும் வீரர் கிடையாது. அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர் எனவே அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் மூன்றாவது போட்டியில் நிச்சயம் அஷ்வின் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி லீட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்ற
காரணத்தினால் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin

அந்த வகையில் நாளைய போட்டியில் அஸ்வின் விளையாடினால் எந்த வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : லீட்ஸ் மைதானத்தில் நிச்சயம் நன்றாக வெயில் அடிக்கும் என்று நினைக்கிறேன். எனவே இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக அமையும் இதன் காரணமாக அஸ்வின் இந்தப் போட்டியில் ஆடவில்லை என்றால் நான்ஆச்சரியப்படுவேன்.

ishanth 2

ஒருவேளை அஸ்வின் இந்த போட்டியில் விளையாடும் பட்சத்தில் நன்றாக விளையாடி வரும் இசாந்த் சர்மா தான் நீக்கப்படுவார். இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் நிச்சயம் அவர்தான் அஸ்வினுக்கு பதிலாக நீக்கப்படும் வீரராக இருப்பார் என மைக்கல் வாகன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement