வித்தியாசமான முறையில் கோலியை அசிங்கபடுத்தி வழியனுப்ப நினைத்த- மைக்கல் வாகன்

Vaughan

ரிசர்வ் டே ஆன இநேற்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டைலர் 74 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ind nz

இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி ஆரம்பத்திலேயே அதலபாதாளத்திற்கு சென்றது. பின்னர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ferguson

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாஹன் இந்திய அணியின் கேபிட்டங்கோலி குறித்து வித்தியாசமான பதிவு ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

 

View this post on Instagram

 

Tickets please @icc 😜

A post shared by Michael vaughan (@michaelvaughan) on

இந்த பதிவில் அரசர் போன்ற உடையில் கோலியின் புகைப்படத்துடன் லண்டன் to மும்பை விமான டிக்கெட் ஒன்றினை வைத்தபடி கோலி அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை வாஹன் பதிவிட்டுள்ளார். மேலும் கோலிக்கு டிக்கெட் கொடுங்க ஐ.சி.சி என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இந்திய ரசிகர்கள் கோலிக்காவது பிளைட் அடுத்து ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து தோற்றதும் இங்கிலாந்து அணிக்கு ஆட்டோதான் என்று அவரின் கருத்தினை எதிர்க்கும் விதமாக பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.