ஒருவேளை மும்பை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் சொதப்பினால் இந்த அணிதான் சாம்பியன் – மைக்கல் வாகன் கணிப்பு

Vaughan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்வியை சந்தித்தால் எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது கருத்தினை டுவிட்டர் வாயிலாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்தில் :

மும்பை தான் கோப்பையை வெல்லும். ஒருவேளை மும்பை அணி ஃபார்ம்அவுட் காரணத்தினால் அவர்கள் தோல்வியை தழுவினால் ஐதராபாத் அணி தான் நிச்சயம் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ட்விட் செய்துள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது தான் வாகன் இப்படி சொல்ல காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றி சாம்பியன் அணியாக திகழ்ந்து வருகிறது. அது மட்டுமின்றி கடந்த 2019 – 20 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக இந்த வருடம் மும்பை அணி களமிறங்க உள்ளது. அதே வகையில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் பலமாக இருப்பதால் நிச்சயம் கடுமையான போட்டி இவ்விரு அணிகளுக்கு இடையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement