பேட்டிங்கில் வெயிட்டா இருந்தாலும் பந்துவீச்சு சுத்தமா பலமில்லை – முக்கிய அணியை சீண்டிய மைக்கல் வான்

Vaughan
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது இரு வாரங்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசும் பவுலர்களுக்கு பஞ்சம் இருக்கிறது. முன்னணி பந்துவீச்சாளர்கள் கூட இந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த திணறி வருகின்றனர்.

dc

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே சில அணிகள் சம பலத்துடன் சரியான வீரர்களை கொண்டு இத் தொடரில் விளையாடி வருகிறது என்றும் குறிப்பிட்ட சில அணிகள் ஐபிஎல் தொடரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்றும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வான் பவுலிங்கில் பலம் குறைந்த ஒரு அணி குறித்து தனது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

பெங்களூரு அணி பேட்டிங்கில் செம ஸ்ட்ராங்கான அணியாக உள்ளது. இருப்பினும் அவர்கள் பௌலிங்கில் படு மோசமாக செயல்பட்டு வருவதால் மொத்தமாக போட்டிகளை கோட்டை விடுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சிக்கலை அந்த அணி சந்தித்து வருகிறது. கோலி, டிவில்லியர்ஸ் என உலகத் தரம் வாய்ந்த மேட்ச் வின்னர் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளனர். அதனால் பேட்டிங்கில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

rcb

அதே நேரத்தில் அதை பேலன்ஸ் செய்யும் அளவிற்கு அவர்களிடம் பந்துவீச்சாளர்கள் இல்லை. ஒருவேளை பந்துவீச்சாளர்களை மட்டும் சரியாக தேர்வு செய்து அவர்கள் விளையாடினால் சாம்பியன் ஆவதற்குரிய அனைத்து தகுதியும் பெங்களூரு அணி பெற்றுவிடும் என அவர் கூறியுள்ளார்.

chahal 1

அவர் கூறியபடி தற்போது உள்ள பெங்களூரு அணியில் படிக்கல், பின்ச், கோலி, டிவில்லியர்ஸ், துபே, வாஷிங்டன் சுந்தர், மொயின் அலி என பேட்டிங்கில் அந்த அணி வெயிட்டாக இருந்தாலும் பந்துவீச்சில் தடுமாற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக சாஹல் தவிர அந்த அணியில் யாரும் சிறப்பாக பந்து வீசுவது கிடையாது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சைனி, டேல் ஸ்டெயின் ஆகியோர் கூட அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது அந்த அணியின் ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement