இந்த வருஷ ஐ.பி.எல் கோப்பையை தலைகீழாக நின்னாலும் இவங்களால ஜெயிக்க முடியாது – நக்கலாக பேசிய மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 56 லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இந்த முறையாவது எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்று களமிறங்கிய பெங்களூரு அணி ஒருவழியாக தட்டுத்தடுமாறி கடைசி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்த தொடரில் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு மிக எளிதாக முன்னேறி விடவில்லை.

IPL

- Advertisement -

பல போட்டிகளில் தோற்று மற்ற அணிகளின் கரிசனையில்தான் முன்னேறி இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பதினெட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தால் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இடையிலான கடைசி லீக் போட்டியில் முடிவிற்காக ஆர்சிபி அணி காத்திருக்க வேண்டியதாக இருந்திருக்கும்.

ஆனால் டெல்லி அணி 19 ஓவரில் தான் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பெங்களூரு அணி 14 புள்ளிகளைப் பெற்று உள்ள கொல்கத்தா அணி பெங்களூரு அணியை விட ரன் ரேட் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக ஐதராபாத் அணியின் போட்டியின் முடிவை தெரிவதற்கு உள்ளாகவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

rcb

இந்நிலையில் பெங்களூரு அணி குறித்து பேசிய முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது …

rcb

பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று கேட்டால் கண்டிப்பாக முடியாது என்று தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறேன். ஆனால் 2020 ஆம் ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உலகமே எதிர்பாராத விஷயத்தைத்தான் நோக்கி இருக்கிறது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். விராட் கோலியின் பேட்டிங் பெங்களூரு அணி வெற்றிபெற்று கொடுக்கலாம் என்று நக்கலாக பேசியுள்ளார் மைக்கேல் வாகன்.

Advertisement