மும்பை அணியை வீழ்த்த ஒரு டீம் ரெடி ஆயிடுச்சி. இந்த வருஷம் வேறலெவல் வெயிட்டாக இருக்காங்க – மைக்கல் வாகன் கருத்து

Vaughan
- Advertisement -

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் கோப்பையை வென்று உலகிலேயே பலம் வாய்ந்த சாம்பியன் அணியாக திகழ்ந்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மிக முக்கியமாக அந்த அணியானது வெற்றிக்காக ஏதேனும் ஒரு வீரரை மட்டுமே சார்ந்திருப்பதில்லை.

mi

- Advertisement -

ஒரு வீரர் சென்றால் இன்னொரு வீரர் அவரும் சென்றால் இன்னொரு வீரர் என்று ஒவ்வொரு வீரரையும் மேட்ச் வின்னர்களாக மாற்றி வைத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது 90களில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணியைப் போல் உள்ளது.

இப்படியிருக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிக்க கூடியவகையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக பெங்களூர் அணி மாறியிருக்கிறது என்று கருத்து கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரர் மைக்கேல் வாஹன். பெங்களூர் அணியைப் பற்றி கூறிய மைக்கேல் வாஹன் :

maxwell

இந்தத் தொடரில் பெங்களூர் அணியின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரு யூனிட்டுகளும் சம பலத்துடன் அமைந்திருக்கிறது. மேலும் ஏலத்தின் போது மேக்ஸ்வெல்லை அந்த அணி ஏலத்தில் எடுத்தது மிகச்சிறப்பான முடிவென்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பெங்களூரு அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை தான் பெரிய தலைவலியாக இருந்தது. அதனை இந்த வருடம் மெக்ஸ்வெல்லின் வருகையால் சரி செய்துள்ளார்கள்.

Shahbaz 1

மேலும் பந்துவீச்சில் இம்முறை சிராஜ், ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது என வீரர்கள் அசத்த பவுலிங் யூனிட்டிலும் பெங்களூரு அணி வலுப்பெற்றுள்ளது. எனவே இந்த தொடரில் மும்பை அணியை வீழ்த்த பெங்களூரு அணி முழுபலத்துடன் தயாராகிவிட்டது என மைக்கல் வாகன் கருத்தினை பதிவிட்டுள்ளார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement