உலகின் தலைசிறந்த டி20 அணி என்றால் அது இந்த அணி தான். அதில் சந்தேகமே இல்லை – மைக்கல் வான் புகழாரம்

Vaughan

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் மும்பை அணி பெற்ற இந்த மிகச்சிறப்பான வெற்றிக்குப் பின்னர் பல்வேறு முன்னாள் வீரர்களும் மும்பை அணிக்கும், அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்தவகையில் முன்னாள் வீரரான மைக்கெல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை அணி குறித்த பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்த அவர் பதிவிட்டுள்ள பதிவில், “உலகின் தலைசிறந்த அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கேள்விகளுக்கே இடம் இல்லை ஐபிஎல் தொடர் தான் உலகின் தலைசிறந்த தொடர்” என்று தெரிவித்துள்ளார்.