ஈஸியான மேட்ச்.. பிட்ச், பேட்டிங் கிடையாது.. இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்க இதான் காரணம்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அப்போட்டியில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் அதிரடியாக விளையாடக்கூடிய இந்தியாவை 119 ரன்களுக்கு சுருட்டியது. அதனால் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவை ஆல் அவுட்டாக்கி பாகிஸ்தான் சாதனையும் படைத்தது.

அதனால் கண்டிப்பாக பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அதே பிட்ச்சில் பாகிஸ்தானை விட மிரட்டலாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அதிரடியாக பேட்டிங் செய்யவிடாமல் மடக்கி பிடித்தனர். அதனால் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் பாகிஸ்தான் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து டி20 உலகக் கோப்பையில் 7வது முறையாக இந்தியாவிடம் வீழ்ந்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்நிலையில் பிட்ச், சுமாராக பேட்டிங் என்பனவற்றைத் தாண்டி இந்தியாவை உலகக்கோப்பை போட்டியில் நம்மால் வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் அணியினர் நம்பவில்லை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

அதுவே அவர்களின் தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியவில்லை. அதாவது அவர்கள் கொஞ்சம் சவாலான பிட்ச்சில் 120 ரன்களை மட்டுமே சேசிங் செய்தனர். பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது இருந்ததை விட இந்தியா பேட்டிங் செய்த போது பிட்ச் கொஞ்சம் அதிக சவாலை கொடுத்தது என்று சொல்வேன்”

- Advertisement -

“இந்தியா பேட்டிங் செய்த போது பிட்ச்சில் பந்து நின்று வந்தது போல் தெரிந்தது. ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது அது நன்றாகவே இருந்தது. ஆனாலும் அவர்களால் 120 ரன்களை எடுக்க முடியவில்லை. இதுவே அந்தப் போட்டியின் என்னுடைய அடிப்படை சுருக்கமாகும். உண்மையில் இந்தியாவை நம்மால் வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் நம்பவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: வாழ்க்கை வேகமாக சுழலுது பாருங்க.. அன்று கிண்டலடிச்சவங்க அவரை இப்போ பாராட்டுறாங்க.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

அவர் கூறுவது போல கடந்த 30 வருடங்களாக உலகக் கோப்பை தொடர்களில் பெரும்பாலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. எனவே அது திறமையை தாண்டி மனதளவில் அவர்களிடம் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் எக்ஸ்ட்ரா அழுத்தத்துடன் இந்திய அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement