இதுவரை யாருமே செய்யல.. ஜெய் ஷா ஆச்சும் வாயில் பேசாம இதை செய்றாருன்னு பாப்போம்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 முதல் பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் அவர் இந்திய கிரிக்கெட்டில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக மகளிர் ஐபிஎல் தொடரை கொண்டு வந்தது, இரு பாலருக்கும் சம ஊதியம், டெஸ்ட் போட்டிகளுக்கு ஊக்கத் தொகையை அறிவித்தது போன்றவற்றை சொல்லலாம்.

மேலும் உலகின் பணக்கார வாரியமான பிசிசிஐ செயலாளராக இருப்பதால் அவர் மற்ற நாட்டு வாரியங்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். அதனால் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் வாயிலாக மிகவும் இளம் வயதில் (35) ஐசிசி தலைவர் பொறுப்பை பெற்றவர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

வாயில் சொல்லாமல்:

முன்னதாக 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை வெற்றிகரமாக சேர்ப்பதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுப்பதும் தம்முடைய இலக்கு என்று ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷா கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு முன்பிருந்த தலைவர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொன்னதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வாயில் மட்டும் சொன்னதை ஜெய் ஷா செய்து காட்டுவார் என்று நம்புவதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகப்பெரிய நியமனம். ஜெய் ஷா மொபைல் நம்பர் என்னிடம் இல்லை. ஆனால் யாராவது ஒருவர் அவருடைய ஈமெயிலை எனக்கு அனுப்புவார்கள். அவர் ஒரு நகர்த்துபவர் மற்றும் அசைப்பவர். காரியங்களை சரியாக செய்கிறார்”

- Advertisement -

செயலில் காட்டுங்க:

“எனவே அடுத்த சில வருடங்களில் நாம் அனைவரும் விரும்பும் தயாரிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்ய அவருக்கு ஒரு கண் இருக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக கிரிக்கெட்டில் நமக்கு இன்னும் தரமான போட்டிகள் மற்றும் தொடர்கள் தேவை. தற்சமயத்தில் நாம் அதைப் பற்றி அதிகமாக பேசி மார்க்கெட்டிங் செய்கிறோம்”

இதையும் படிங்க: தோனி, கோலி, கெயில்.. ஐபிஎல் வரலாற்றின் டாப் 5 மகத்தான இன்னிங்ஸ் லிஸ்டை தேர்ந்தெடுத்த ரெய்னா

“இருப்பினும் டி20 லீக் தொடர்களும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டும் அதை முந்துகிறது. ஆனால் பொறுப்பில் இருப்பவர்கள் அதை மறுத்து விட்டு டெஸ்ட் போட்டிகள் தான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் அதற்காக எதையும் செய்வதில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் ஐசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement