கிரேட் பும்ராவின் போராட்டத்தை இப்படியா வீணடிப்பீங்க.. அது மிஸ் ஆகலன்னா இந்தியா ஜெய்சுருக்கும்.. வாகன் ஆதங்கம் 

Micheal Vaughan
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு பெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா நழுவ விட்டது. அதனால் ஜஸ்பிரித் பும்ராவின் போராட்டம் வீணானது என்றே சொல்லலாம்.

ஏனெனில் முதல் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் எடுத்த அவர் கேப்டனாக கிட்டத்தட்ட தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதற்கடுத்த போட்டிகளிலும் துல்லியமாக பந்து வீசிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அந்த வகையில் மொத்தம் 5 போட்டிகளில் அவர் 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு தொடர் முழுவதும் தனி ஒருவனாக போராடினார்.

- Advertisement -

கிரேட் பும்ரா:

இருப்பினும் மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறியதால் இந்தியா தோல்வியை சந்தித்தது. அவருடைய ஆட்டத்திற்கு பரிசாக இந்த தொடரின் நாயகன் விருதை ஆஸ்திரேலிய வாரியம் சமர்ப்பித்தது. இந்நிலையில் வரலாற்றின் மகத்தான பவுலரான பும்ராவுக்கு மற்ற இந்திய பவுலர்கள் கை கொடுக்கவில்லை என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

அதே போல கடைசி கிரிக்கெட் போட்டியில் பும்ரா காயமில்லாமல் முழுமையாக விளையாடிருந்தால் இத்தொடரை இந்நேரம் இந்தியா வென்றிருக்கும் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எந்த கேள்வியும் இல்லாமல் மகத்தான பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவை ஆஸ்திரேலியா எதிர்கொண்டது”

- Advertisement -

நழுவிய வெற்றி:

“அவருக்கு எதிராக நீங்கள் சில கொஞ்சம் ரன்கள் அடித்தால் சரியாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். அவர் இந்த தொடரில் 32 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாக செயல்பட்டார். ஆனால் அவருக்கான பேக்-அப் பவுலரை பாருங்கள். ஹர்ஷித் ராணா 50 சராசரியில் 4 விக்கெட்டுகள், ப்ரசித் கிருஷ்ணா இந்த வாரம் 17.8 என்ற சராசரியில் இந்த வாரம் ஓரளவு அசத்தினார்”

இதையும் படிங்க: நீங்க விளையாடணுமா? வேண்டாமா? என்கிற முடிவு அவங்ககிட்ட தான் இருக்கு – ரோஹித்தை எச்சரித்த மஞ்சரேக்கர்

“ஆகாஷ் தீப் 50 என்ற சராசரியில் 5 விக்கெட்டுகள் நித்திஷ் ரெட்டி 38 என்ற சராசரியில் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அந்த வகையில் அவர்கள் பும்ராவுக்கு கை கொடுக்க தடுமாறினார்கள். அதே சமயம் பவுலிங் செய்வதற்கு அதிக சாதகமான இருந்த கடைசி போட்டியின் பிட்ச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடவில்லை. ஒருவேளை பும்ரா அதில் ஃபிட்டாக விளையாடியிருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும்” என்று கூறினார்.

Advertisement