
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.
அதன் காரணமாக இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தும் என்று ரிக்கி பாண்டிங், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்தார்கள். அதே சமயம் இந்தியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள் கண்டிப்பாக நாங்கள் போராடி வெல்வோம் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார். கடைசியில் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா இல்லாமல் பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடி இந்தியா வென்றது.
அதனால் தங்களை குறைத்து மதிப்பிட்ட முன்னாள் வீரர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததும் தாம் கணித்தது போல இந்தியா வென்றதாக சௌரவ் கங்குலி தமக்கு மெசேஜ் செய்ததாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் சொன்ன அந்த ஒரு வெற்றியை தான் இந்தியா முதல் போட்டியில் பெற்றதாகவும் மைக்கேல் வாகன் தன்னுடைய கருத்தை மாற்றாமல் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கங்குலியிடமிருந்து சிலவற்றை நான் படித்துள்ளேன். நம்முடைய நிகழ்ச்சிக்கு அவர்களிடையே அவருடைய பணிவை நான் விரும்பினேன்”
“அவர் மிகவும் பணிவாக இருந்தார் என்பது முக்கியம். தற்போது அவர் எனக்கு அனுப்பிய மெசேஜை படிக்கிறேன். முதல் போட்டி வெள்ளிக்கிழமை துவங்கியது அல்லவா? இந்தியா 150க்கு ஆல் அவுட்டாகி பின்னர் ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டினார்கள். ஆனால் கங்குலி அனுப்பிய இந்த மெசேஜ் சனிக்கிழமை மாலை 5 மணி கடந்ததும் 12 மணி நிமிடங்களில் வந்தது”
இதையும் படிங்க: இந்தியாவை சாய்க்க.. 132 வருட ஜாம்பவான் கேரி சோபர்ஸ் சாதனையை சமன் செய்த வீரரை கொண்டு வந்துள்ள ஆஸி
“அதில் ஹாய் மைக்கேல் என்னுடைய கணிப்பு நன்றாக செல்கிறது என்று கங்குலி தெரிவித்தார். இல்லை நாங்கள் 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று தெரிவித்திருந்தோம். எனவே இந்தியாவின் அந்த ஒரு வெற்றி தான் தற்போது நடந்துள்ளது” என்று கூறினார். அதாவது அடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்து வெல்லும் என்று மைக்கேல் வாகன் தன்னுடைய கருத்தை மாற்றாமல் அடம் பிடிக்கிறார்.