இந்தியாவை சாய்க்க.. 132 வருட ஜாம்பவான் கேரி சோபர்ஸ் சாதனையை சமன் செய்த வீரரை கொண்டு வந்துள்ள ஆஸி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்தது.

மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலேயே தோற்றதால் இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய அணியினர் தெரிவித்தார்கள். ஆனால் முதல் போட்டியில் அதற்கு தகுந்தார் போல் விளையாடாத அந்த அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை பதிவு செய்தது. அதனால் மோசமான சாதனை படைத்த அந்த அணி விமர்சனங்களை சந்தித்துள்ளது.

- Advertisement -

புதிய வீரர்:

அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் லேசான காயத்தை சந்தித்தார். ஒருவேளை அடுத்த போட்டிக்குள் காயத்திலிருந்து குணமடையாமல் போனால் அவரால் இரண்டாவது போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதை சமாளிப்பதற்காக ஆஸ்திரேலியா தங்களுடைய அணியில் பியூ வெப்ஸ்டர் எனும் வீரரை சேர்த்துள்ளது.

30 வயதாகும் ஆல் ரவுண்டரான அவர் இதுவரை 93 உள்ளூர் போட்டிகளில் 5297 ரன்களை குவித்துள்ளார். அதே போல பந்து வீச்சில் அவர் 148 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் ரஞ்சிக் கோப்பை போல ஆஸ்திரேலியாவில் ஷெபீல்ட் ஷீல்டு தொடர் கடந்த 132 வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதில் கடந்த சீசனில் டாஸ்மானியா அணிக்காக அவர் 900க்கும் மேற்பட்ட ரன்களையும் 30+ விக்கெட்டுகளையும் எடுத்தார்.

- Advertisement -

சோபர்ஸ் போல:

அதன் வாயிலாக ஷெபீல்ட் ஷீல்டு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கேரி சோபர்ஸ்க்கு பின் ஒரே சீசனில் 900+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை வெப்ஸ்டர் படைத்தார். அத்துடன் சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியிலும் அவர் நன்றாக விளையாடினார். அதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியா அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவிலேயே பாத்தேன்.. இனிமேல் ஆஸி தான் கவலைப்படனும்.. விராட் கோலி பற்றி ராகுல் டிராவிட்

இதை அடுத்து இரண்டாவது போட்டியில் மார்ஷ் காயத்திலிருந்து முடியாமல் போனால் அவர் அறிமுகமாக களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. அந்த வகையில் இந்திய அணி வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலியா புதுமுக வீரரை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டி பகலிரவாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement