- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காட்டிய பயம் பத்தலையா? கம்பேக் இந்தியா 4 – 0ன்னு தோற்கும்.. வாசிம் ஜாபரை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இம்முறை குறைந்த அனுபவம் கொண்ட வீரர்களுடன் விளையாடுவதால் இந்தியா வெல்வது கடினம் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது.

ஆனால் அதையும் தாண்டி லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங் துறையில் சிறப்பாக விளையாடிய இந்தியா 471, 364 ரன்களை குவித்து அசத்தியது. கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (2), கேஎல் ராகுல் ஆகியோர் சதம் அடித்தனர். அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து இந்தியா புதிய சாதனையும் படைத்தது.

- Advertisement -

கலாய்த்த வாகன்:

இருப்பினும் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய கருண் நாயர், தாக்கூர் ஆகியோர் அந்த அபார துவக்கத்தை சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள். அதே போல ஜெய்ஸ்வால் (4), ரிசப் பண்ட், ஜடேஜா முக்கிய கேட்ச்களை தவற விட்டார்கள். மேலும் பவுலிங் துறையில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதைப் பயன்படுத்தி கடைசி நாளில் எளிதாக வென்ற இங்கிலாந்து தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதைப் பார்த்த இங்கிலாந்து முன்னால் கேப்டன் மைக்கேல் வாகன் வழக்கம் போல இந்தியாவின் முன்னாள் வீரர் வாஷிங் ஜாஃபரை ட்விட்டரில் கலாய்த்தார். இது பற்றி அவர் பதிவிட்டது பின்வருமாறு.

- Advertisement -

பயம் பத்தலையா:

“மாலை வணக்கம் வாசிம் ஜாஃபர். 1 – 0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என நக்கலாக டேக் செய்து பதிவிட்டார். அதற்கு இங்கிலாந்து பவுலர்களை இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கிய போது நேரலை வர்ணனையில் மைக்கேல் வாகன் கொடுத்த ஒரு ரியாக்சனை வாசிம் ஜாஃபர் பதிலடியாக கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜடேஜாவின் அனுபவம் வேஸ்ட்.. பும்ராவை விட அதிகமா கிடைச்ச உதவியை விட்டாரு.. மஞ்ரேக்கர் விமர்சனம்

இது பற்றி இந்திய அணியின் ஆட்டத்தை பார்த்து மைக்கேல் வாகன் சோகமான ரியாக்னை கொடுத்த புகைப்படத்துடன் வாசிம் ஜாஃபர் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “இது போல இளம் இந்திய அணி உங்களைக் கவலையடைய வைத்ததில் மகிழ்ச்சி. வெற்றியால் மகிழ்ச்சியாக இருங்கள் மைக்கேல். நாங்கள் மீண்டும் கம்பேக் கொடுப்போம்” என பதிலடி கொடுத்தார். அதற்கு “4 – 0 என்ற கணக்கில் தோற்பீர்கள் வாசிம்” என வாசிம் ஜாபாருக்கு மீண்டும் மைக்கேல் வாகன் கிண்டலான பதிலைக் கொடுத்துள்ளார்.

- Advertisement -