- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதெல்லாம் நான்சென்ஸ்.. சச்சினையே முந்தப்போகும் ரூட் தான் கோலியை விட பெஸ்ட்.. லேமனுக்கு வாகன் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 81 சதங்களையும் அடித்து சிறந்த பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் சதத்தை அடித்தார். அந்த வகையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.

அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்த விராட் கோலி மாபெரும் சாதனையையும் படைத்தார். மறுபுறம் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் 12000 ரன்களை கடந்து அசத்தி வருகிறார். அதனால் 15921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சினை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

சிறந்த விராட் கோலி:

ஆனால் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் அவர் இதுவரை ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதத்தை கூட அடித்ததில்லை. அதனால் ஜோ ரூட் சிறந்த வீரர் என்றாலும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் அளவுக்கு மிகச் சிறந்த வீரர் கிடையாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் சமீபத்தில் கூறியிருந்தார். அவருக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி சென் மார்னிங்ஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்ன ஒரு நான்சென்ஸ் காரணம். இப்படியே ஃபிட்டாக இருந்து தொடர்ந்து வலுவாக விளையாடினால் சச்சின் டெண்டுல்கரை இன்னும் சில வருடங்களில் முந்தக் கூடிய வீரரை பற்றி நாம் இங்கே பேசுகிறோம். ஆஸ்திரேலியாவில் அவர் சதம் அடிக்கவில்லை என்பதால் அனைத்தும் முடிந்து விடாது”

- Advertisement -

வாகன் பதிலடி:

“இங்கே நீங்கள் வந்து ரன்கள் அடிக்க விரும்புவீர்கள். சொல்லப்போனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து இங்கிலாந்து அணிக்காக பஸ்பால் அணுகு முறையில் ஜோ ரூட் விளையாட உள்ளார். எனவே அடுத்த வருடம் லேமனுக்கு அவர் பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற உணர்வு எனக்கு உள்ளது. தற்போது இங்கிலாந்துக்காக அவர் குக்குபரா பந்தில் அபாரமாக விளையாடி வருகிறார்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து பாகிஸ்தான் பழி வாங்க இதான் ஒரே வழி.. சோயப் அக்தர் அட்வைஸ்

“எனவே ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் அவர் சில சதங்களை அடிக்கலாம். இம்முறை அவர் விளையாடுவதை பார்ப்பது சிறந்த போட்டியாக இருக்கும்” என்று கூறினார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட ஜோ ரூட் தான் சிறந்தவர் என்று மைக்கேல் வாகன் கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -