கடந்த 30 வருடத்தில் கோலி மாதிரி யாருமே அதை செய்யல.. தோனி விட்ட இந்தியாவை தூக்கியவர்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2011இல் அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை 46 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 30 சதங்கள் அடித்துள்ள அவர் சச்சினுக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.

அதை விட 2014இல் தோனி ஓய்வு பெற்ற போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 7வது இடத்தில் திணறியது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்தியாவை ஆக்ரோஷம் நிறைந்த அணியாக மாற்றி 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வெற்றியைப் பெற்ற அவர் இந்தியா, ஆசியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

தூக்கிய கிங் கோலி:

அப்படிப்பட்ட அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது. இந்நிலையில் கடந்த 30 வருடங்களில் விராட் கோலியை போல் வேறு யாரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து பங்காற்றியதில்லை என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விராட் கோலியை தவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேறு யாரும் அதிக பங்களிப்பைக் கொடுத்தார்கள் என்று நான் நம்பவில்லை. தசாப்தத்திற்கு முன் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை இழந்ததாக நான் கவலைப்பட்டேன். எம்எஸ் தோனி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒரு மகத்தான வீரர்”

- Advertisement -

வாகன் பாராட்டு:

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் இழந்த அணியை அவர் தலைமை தாங்கினார் என்று நான் கருதினேன். அந்த சமயத்தில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தைப் பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. அப்போது கேப்டனாக வந்த விராட் கோலியின் ஆர்வம், திறமை, எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சமாக பேசிய விதம் ஆகியவை அதை மீட்டெடுப்பதற்கான ஒரு பெரிய ஷாட்டாக அமைந்தது”

இதையும் படிங்க: விராட் கோலி ஆசைப்பட்டும் பிசிசிஐ வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.. அதுக்கு ரஞ்சி தான் சாட்சி.. கைப் ஏமாற்றம்

“விராட் கோலி இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் தன்னுடைய ஒளியை இழந்திருக்கலாம். ஒருவேளை விராட் கோலி ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் தன்னுடைய மகத்துவத்தையும், ஆர்வத்தையும் முதலீடுகளையும் இழந்திருக்கக்கூடும்” என்று கூறினார். இதை அடுத்து விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement