கோலி இதை செய்தால் மட்டுமே போதும். மீண்டும் ரன்களை குவிக்க தொடங்கி விடுவார் – மைக்கல் வான் டிப்ஸ்

Vaughan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான பார்மட்டிலும் ரன் மழை பொழியும் ரன் மிஷன் கோலி 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அடித்த சதத்தை தொடர்ந்து தற்போது வரை ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். மேலும் தொடர்ந்து அரை சதங்கள் விளாசினாலும் சதத்தை எட்டுவது அவருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் தொடரிலும் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார்.

Kohli

- Advertisement -

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் சரி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரி அவரது பேட்டிங் மெச்சிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அது மட்டுமின்றி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியிலும் கோலி ரன் கணக்கை துவங்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

மேலும் கடைசியாக நடைபெற்ற இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் டக் அவுட்டாகி வெளியேறி உள்ளதால் அவரது பார்ம் தற்போது கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் பார்ம் குறித்து அட்வைஸ் செய்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னணி முன்னாள் கேப்டன் மைக் வாகன் கூறுகையில் :

vaughan

கோலி பார்ம் அவுட் ஆகவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் : கோலி கொஞ்சம் சுயநலத்துடன் விளையாட வேண்டும் அது இந்திய அணிக்கும் நலன் சேர்க்கும். களத்திற்கு வந்தவுடன் ரன்களை சேர்ப்பதைக் காட்டிலும் கிரீஸில் சிறிது நேரம் நின்று கோலி விளையாட வேண்டும். பத்து பந்துகள் வரை அவர் ரன்கள் சேர்க்காமல் களத்தில் நிற்க வேண்டும்.

Kohli

அதை செய்து விட்டாலே கோலி ரன் சேர்க்க தொடங்கிவிடுவார். அப்படி செய்தாலே போதும் மீண்டும் கோலிக்கு ரன்கள் சேர்ப்பது எல்லாம் தண்ணி பட்ட பாடு. அவர் பார்ம் அவுட் ஆகவில்லை என்பதை என்னால் ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement