ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கே வின் அழகிய நாட்கள் முடிவுக்கு வந்துடுமோனு பயமா இருக்கு – இங்கி வீரர் வருத்தம்

CSK-1

மூன்று முறை சாம்பியன் பட்டம் சென்னை அணிக்கு இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை ஏனெனில் அணியில் உள்ள வீரர்கள், அவர்களின் செயல்பாடு மற்றும் அணித்தேர்வு என இம்முறை எதுவுமே சரியாக அமையவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த போட்டியும் சரியாக அமையவில்லை.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து விட்டது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே அணி 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இந்நிலையில் தற்போது தோனியின் தலைமைப் பண்பு கேள்விக்கு உள்ளாக்கப் பட்டுவருகிறது. அதே நேரத்தில் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் சரியாக வருவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனை அந்த அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இருவரும் ஒப்புக் கொண்டதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் இன்பமான காலகட்டம் முடிந்து விட்டதாக தெரிகிறது என்று முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாஹன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அவர் கூறுகையில்…

- Advertisement -

சிஎஸ்கே அணியின் இன்பமான அற்புதமான நாட்கள் முடிவுக்கு வருகிறதோ ? என்று நான் அஞ்சி கொண்டிருக்கிறேன். தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணியினரின் அருமையான நாட்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். எனவே இனிவரும் போட்டிகளில் தோனி முன்னரே இறங்கி பவர்பிளே ஓவர்களில் அடித்து ஆடலாம் என்று அவர் கூறியுள்ளார்.