மீண்டும் சமூகவலைத்தளத்தில் மோதிக்கொண்ட மைக்கல் வாகன், வாசிம் ஜாபர் – இந்தமுறை ஃபைட் கொஞ்சம் ஓவர்தான்

இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றியும் இந்திய வீரர்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஏதாவது ஒரு எக்குத்தப்பான கருத்தை கூறி அடிக்கடி சர்சையைக் கிளப்புவர்தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேட்னான மைக்கேல் வாஹன். இவருடைய சர்சையான கருத்துக்கு பல நேரங்களில் தக்க பதிலடி கொடுத்து அவரை வெறுப்பேற்றுவதில் முதல் இடத்தில் இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர். கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெற்றுவிட்ட இந்த இருவரின் மோதல்களும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி வரும். இதற்கிடையில் ஒரு தனியார் விளையாட்டு வலைளதம் ஒன்றுடன் ட்விட்டர் பக்கத்தில் நேரலையில் உரையாடி இருக்கிறார் மைக்கேல் வாஹன்.

vaughan

அந்த நேரலையில் அவரிடம், நீங்கள் உங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் எந்த கிரிக்கெட் வீரரை ப்ளாக் செய்ய விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டது அந்த தனியார் வலைதளம். அதற்கு சிறிதும் யோசிக்காத மைக்கேல் வாஹன் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபரைத்தான் ப்ளாக் செய்ய விரும்புகிறேன் என்று பதில் கூறியிருக்கிறார். அதைப் பற்றி பேசிய அவர், உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் நான் யாரையும் ப்ளாக் செய்ய விரும்ப மாட்டேன்.

- Advertisement -

ஆனால் நான் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளாமல் என்னை யாராவது திட்டினால் அவர்களை உடனடியாக ப்ளாக் செய்து விடுவேன் என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மைக்கேல் வாஹனின் இந்த பேட்டியைக் கண்ட வாசிம் ஜாபர், அவர் ஏன் தன்னை ப்ளாக் செய்ய விரும்புகிறார் என்ற பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதின்மேல் “மைக்கேல் வாஹன் ஏன் என்னை ப்ளாக் செய்ய விரும்புகிறார் என்று தற்போது தான் நானும் என் நண்பர்களும் தெரிந்து கொண்டோம்” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதற்கு கீழ், 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறார் வாசிம் ஜாபர்.

- Advertisement -

2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் கொண்ட ட்ராவிட் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, மைக்கேல் வாஹன் தலைமையிலான இங்கிலாந்து அணியை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அப்போது இந்திய டெஸ்ட் அணியில் வாசிம் ஜாபரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் தோல்வியடைந்த விரக்தியினால் தான், மைக்கேல் வாஹன் என்னை ப்ளாக் செய்ய விரும்புகிறார் என்று அந்த பதிவில் மறைமுகமாக வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement