கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ள மைக்கல் ஹஸ்ஸி – விவரம் இதோ

Hussey

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐ.பி.எல் தொடர் சிறப்பாக நடைபெற்று வந்த வேளையில் வீரர்களுக்கு இடையே அதிகரித்த கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடரானது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தொடர் நடைபெறாது எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

sandeep

இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் சன்ரைசர்ஸ் அணியில் சகா, டெல்லி அணியில் அமித் மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்து பரவியிருந்தது. இதனால் மேலும் பல வீரர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருப்பதன் காரணமாக இந்த தொடர் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் கோச் மைக்கல் ஹசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தற்போது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவில் இருந்து மே 15 ஆம் தேதிக்குள் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் என யாரும் ஆஸ்திரேலியாவிற்கு நுழையக்கூடாது என்றும் அப்படி அத்துமீறி ஆஸ்திரேலியாவிற்கு நுழைந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

hussey 1

இப்படி ஒரு சூழ்நிலையில் மைக்கல் ஹசி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்தியாவிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொற்று குணம் அடைந்த பின்னரும் அவர் பல நாட்களுக்கு இந்தியாவிலேயே இருக்க நேரிடும். இதன் காரணமாக அடுத்து அவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

Hussey

மேலும் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய திரும்ப இருந்த மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இது ஒரு மோசமான நிலையை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே மே 15 ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் இருந்து யாரும் ஆஸ்திரேலியாவில் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement