இந்திய அணியில் இவர் இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அப்பட்டமாக தெரிகிறது – மைக்கல் ஹோல்டிங் பேட்டி

Holding
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளிலும் முடிந்து விட்டது. இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி படு மோசமாக தோற்றுவிட்டது. இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய சேசிங் செய்ய வேண்டியிருந்தது .ஆனாலும், அதனை செய்ய முடியாமல் கோட்டை விட்டு விட்டது இந்திய அணி. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது.

indvsaus

- Advertisement -

இந்த இரண்டு தோல்விகளுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஒரு சிலர் பந்துவீச்சாளர்கள் மீதும் ஒரு சிலர் பேட்ஸ்மேன்களின் மீதும் பழி சுமத்துகிறார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் தோனி போன்று ஒரு வீரர் இல்லை என்பதுதான் இந்திய அணியில் உள்ள பிரச்சனை என்று கூறியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மைக்கேல் ஹோல்டிங்.

இதுகுறித்து அவர் கூறுகையில்… இந்திய அணியில் மிகத் திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், அணியில் தோனி இல்லாததால் தடுமாற்றம் தெரிகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ஆட்டத்தின் நடுவே வந்து போட்டியை கன்ட்ரோல் செய்து கொள்வார் அவர். அணியில் இருந்த போது மிகப் பெரிய ரன்னை கூட சேஸ் செய்திருக்கிறது.

dhoni 2

இந்திய அணிக்கு டாஸ் விழுவில்லை என்றாலும் கூட தோனியின் இருப்பை நம்பியே இந்திய அணி இருந்து வந்தது. என்ன தான் ஹர்திக் பாண்டியா போன்று அதிரடியாக அடித்து விளையாடும் வீரர்கள் இருந்தாலும் இதுபோன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு தேவை .அதற்கு காரணம் அவருடைய திறன் மட்டுமல்ல தோனி போன்ற ஒரு கேரக்டர் அணியில் தேவை.

dhoni

அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்று தெரிவித்துள்ளார் மைக்கேல் ஹோல்டிங். தோனி இல்லாமல் கடந்த 17 வருடத்தில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement