இவ்ளோ கம்மியான தொகை போனதுக்கு இவர் ஐ.பி.எல் தொடரில் விளையாடாமலே இருக்கலாம் – மைக்கல் கிளார்க் ஓபன்டாக்

Clarke

14வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் மினி ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஆகியோரை பலதரப்பட்ட அணிகளும் போட்டி போட்டுகொண்டு தேர்வு செய்தனர். அதில் சில இளம் வீரர்கள் அதிக பட்ச தொகைக்கும், சில நட்சத்திர வீரர்கள் சாதாரண விலைக்கு ஏலம் போகினர். அதன்படி கடந்த ஆண்டு பெரிய தொகைக்கு ஏலம் போன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல் அணிக்காக வெறும் 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.

ipl trophy

அதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து அவரை வெளியேற்றியது. மேலும் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்துள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் ஸ்டீவன் ஸ்மித் பெயர் இடம் பெற்று இறுதியில் அவரது அடிப்படை தொகையாக இரண்டு கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவரை இந்த தொகை கொடுத்து எடுக்க யாரும் பெரிதளவு ஆர்வம் காட்டவில்லை.

அதனால் ஆரம்ப விலையில் இருந்து சற்று அதிகம் சென்று வெறும் 20 லட்சம் அதாவது இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் குறித்து பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் கூறுகையில் : டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை விளையாடக் கூடியவர் ஸ்மித். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.

Smith

இதன் காரணமாக இந்த ஆண்டு அவருக்கு குறைவான தொகை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய : அவர் கடந்த முறை ஒப்பிடும்போது இந்த முறை அவரது ஏலத்தொகை மிகவும் குறைவு. ஐபிஎல் போட்டிகளுக்காக எட்டு வாரங்கள் அவர் இந்தியாவில் செலவிட வேண்டியிருக்கும். இந்த குறைந்த தொகைக்காக அவர் கிட்டத்தட்ட இத்தனை நாட்கள் குடும்பத்தை பிரிந்து இருப்பாரா ? எனக்கு என்று எனக்கு தோன்றவில்லை.

- Advertisement -

Smith-1

இதற்கு அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமலே இருக்கலாம். ஸ்மித் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். விராட் கோலிக்கு முதலிடம் ஆனாலும் முதல் மூன்று இடங்களுக்குள் ஸ்மித் இருக்கிறார் இவ்வளவு பெரிய வீரருக்கு இவ்வளவு சிறிய தொகைதானா ? என்பதுபோல் மைக்கல் கிளார்க் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.