INDIA : போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் ஜடேஜாவை பாராட்டிய – மைக்கேல் கிளார்க்

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Jadeja
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

india

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்திய அணியின் வீரரான ஜடேஜா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு இல்லை என்றாலும் அவர் மாற்று வீரராக பீல்டிங் செய்ய வரும் பொழுது ஒரு கேட்ச்சையும் அவர் விடுவதில்லை. மேலும் ரன்களை தடுக்கவும் அவர் சிறப்பாக பீல்டிங் செய்கிறார்.

Jadeja 1

என்னை பொறுத்தவரை இந்த உலக கோப்பை தொடரில் இவரைப் போன்ற சிறப்பான பீல்டர் கிடையாது என்றும் தனது ஆதரவினை ஜடேஜாவுக்கு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாக தனது திறமையை வெளிக்கொண்டு வருவார் என்றும் கிளார்க் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement