இந்த குறைந்த தொகைக்கு அவர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடறதுக்கு வீட்டிலே இருந்துடலாம் – கிளார்க் ஓபன்டாக்

Clarke
- Advertisement -

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் அணிகள் எல்லாம் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த தொடர் நடக்க உள்ளது. அதற்கான வீரர்களின் ஏலமும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்று முடிந்தது. கடந்த முறை கொரோனா காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முறை இந்தியாவில் பழையபடி போட்டிகள் நடக்கும். கொரோனாவை காரணம் காட்டி சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடக்கும்.

ipl trophy

- Advertisement -

இந்தநிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்மித் ராஜஸ்தான் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். வெளியேற்றப்பட்ட ஸ்மித் தற்போது டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். ஆனால் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே இவர் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் சமயத்தில் ஸ்மித் ஏதாவது பொய்யான காரணத்தை சொல்லிவிட்டு, போட்டியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கல் கிளார்க் பகிரங்கமாக கூறியுள்ளார். அதில், ஸ்மித் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்தான்.
அவரை குறைந்த விலைக்கு எடுத்துள்ளனர். 2.2 கோடி ரூபாய் என்பது அவருடைய திறமைக்கு அதிக தொகை கிடையாது.

Smith

அதனால் அவர் இந்தியா வந்த பயோ பபுளில் இருப்பதை விரும்ப மாட்டார். இதற்கு பதிலாக அவர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் இருப்பார். காயம் இருக்கிறது என்று கூறிவிட்டு அவர் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வார். 2.2 கோடி ரூபாய் அவருக்கு பெரிய தொகை கிடையாது என்று மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். குறைந்து தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை ஸ்மித் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

Smith

இருப்பினும் நிச்சயம் ஸ்மித் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என்றும் மேலும் டெல்லி அணியின் கோச்சாக ரிக்கி பாண்டிங் இருப்பதால் கண்டிப்பாக ஸ்மித் விளையாடி தனது பலத்தை நிரூபிப்பார் என்று தெரிகிறது.

Advertisement