இவர் ஒருவரை பார்த்து ஆஸி வீரர்கள் பயப்படுகின்றனர். அதனாலே ஆஸி வீரர்கள் அடக்கி வாசிக்கிறார்கள் – கிளார்க் குற்றச்சாட்டு

Clarke
- Advertisement -

சமீபகாலமாக ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோச போக்கு காணாமல் போனதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தான் காரணமென மைக்கேல் கிளார்க் புதுவிதமான ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் டெஸ்ட் தொடரில் மோதும்போது ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதை நாம் பார்த்திருப்போம் . ஆனால் சமீப காலமாக அந்த ஆக்ரோஷ தன்மை குறைந்து விட்டதை நாம் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு முறையும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி மோதும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அடக்கி வாசிக்கவே செய்கின்றனர். ஏனெனில் ஐபிஎல் பணமழை ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு விராட் கோலியையும் இந்திய நட்சத்திர வீரர்களையும் ஸ்லெட்ஜ் செய்வதை அவர்கள் நிறுத்தி விட்டனர். இதுகுறித்து தற்போது சர்ச்சையாக பேசி சலசலப்பை உருவாக்கியுள்ளார் மைக்கேல் கிளார்க்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : கிரிக்கெட் உலகில் இந்தியா எவ்வளவு பெரிய பலம் பொருந்தியது என்பதை நாமறிவோம். சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி உள்நாட்டு தொடரான ஐபிஎல் தொடரிலும் சரி. ஆஸ்திரேலிய அணியும் ஆஸ்திரேலிய வீரர்களும் பல நேரங்களில் சமீபகாலமாக விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களை ஸ்லெட்ஜ் செய்வதை நிறுத்திவிட்டனர்.

Kohli

அவர்களது சுயநலனுக்காக இந்தியாவிடம் பணிந்து நடந்து கொண்டிருக்கின்றனர். ஏப்ரலில் இந்தியாவிற்கு தான் வரவேண்டும், அதே வீரர்களுடன் ஆட வேண்டும் என்பதற்காக இந்திய நட்சத்திர வீரர்களையும் பிற வீரர்களையும் ஸ்லெட்ஜ் செய்ய பயந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

அதேபோல் முக்கிய ஐபிஎல் அணிகளும் ஆஸ்திரேலிய வீரர்களை ஏலம் எடுப்பதில் மும்முரமாக இருக்கின்றன. விராட் கோலியை திட்டி ஆடினால் அவர் தன்னை பெங்களூரு அணிக்கு எடுக்க மாட்டார் என்று நினைத்துக் கொள்கின்றனர். 6 வாரங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் இழந்துவிடுவோம் என்று நினைத்து வருகின்றனர்.

Stoinis

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் வழக்கமான ஆக்ரோச போக்கே காணாமல் போனது என்று புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார் மைக்கேல் கிளார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement