அதை செய்ய எல்லாரும் சச்சின் கிடையாது.. ஆனா கோலி ஓய்வு பெற்றா இழப்பு இந்தியாவுக்கே.. மைக்கேல் கிளார்க் ஆதரவு

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கும் தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் அவரை ஓய்வு பெறுமாறு இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக அவுட் சைட் ஆஃப் பந்துகளில் விராட் கோலி தம்முடைய விக்கெட்டை தொடர்ந்து பரிசளித்து வந்தார். அதை தவிர்ப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் போல கவர் ட்ரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று சில முன்னால் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் அதையெல்லாம் கேட்காத விராட் கோலி தொடர்ந்து அப்படியே அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

சச்சின் கிடையாது:

அதனால் பொறுமை இழந்த இந்திய ரசிகர்கள் இது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரம் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் விராட் கோலி தற்போது ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்குத்தான் இழப்பு என்று முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பேசுபவர் விராட் கோலி. அந்த நபர் நாளை கூட இரட்டை சதம் அடிக்கலாம்”

“அந்தளவுக்கு நல்ல வீரரான அவர் தமக்குள் திறன் இருக்கும் வரை விளையாட வேண்டும். ஒருவேளை தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெற்றால் அது ஒரே ஒரு அணிக்கு மட்டுமே இழப்பாக இருக்கும். அது இந்தியா. ஒருவேளை நான் அணியின் கேப்டனாக இருந்து விராட் கோலி அதில் இருந்தால் இப்படி ரன்கள் அடிக்காத சூழ்நிலையில் கூட அவர் அணியில் தொடர்ந்து இருக்க சண்டை இடுவேன்”

- Advertisement -

கிளார்க் ஆதரவு:

“விராட் கோலியை காட்டிலும் சச்சின் முற்றிலும் வித்தியாசமான வீரர். இந்த ஆஸ்திரேலிய தொடரில் சச்சினை போல் விராட் கோலி விளையாட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். கவர் டிரைவ் அடித்து விக்கெட்டை இழந்த சச்சின் பின்னர் சிட்னியில் 200 ரன்கள் அடித்தார். அந்த வகையில் விராட் கோலியை விட சச்சின் வித்தியாசமான வீரர்”

இதையும் படிங்க: முகமது ஷமி மட்டுமல்ல.. மற்றொரு முன்னணி வீரரும் சாம்பியன்ஸ் டிராபிக்கு திரும்புகிறார் – விவரம் இதோ

“பந்தை மற்றும் பேட்டை மட்டும் வைத்து விளையாடுவது விராட் கோலியின் மிகப்பெரிய பலம். அவர் தம்முடைய வழியில் வித்தியாசமாக விளையாடக் கூடியவர்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் தான் இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்குள் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் மீண்டும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement