ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் வென்று ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் கடந்த 2 தொடர்களில் தோல்வியை கொடுத்த இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலிய அணி தயாராக உள்ளது.
முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 5 வருடங்களில் 3 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்து சுமாரான ஃபார்மில் இருப்பதாக ரிக்கி பாண்டிங் கவலை தெரிவித்திருந்தார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அசத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அது பற்றி கேட்ட போது இந்திய அணியை பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிரடியான பதிலடி கொடுத்தார்.
நாட்டுக்காக போட்டி:
அதற்கு மேத்தியூ ஹைடன், ப்ராட் ஹாடின் உள்ளிட்ட நிறைய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் இந்தத் தொடரில் கௌதம் கம்பீர் தம்முடைய அணி வீரருக்கு ஆதரவாக அவ்வாறு சொன்னதில் எந்த தவறுமில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்போதெல்லாம் நீங்கள் எதிரணி வீரர்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுகிறீர்கள்”
“அதனால் விஷயங்கள் கடினமாகின்றன. நான் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது அல்லது அதற்கு முன் இது மிகவும் எளிதாக இருந்தது. அப்போதெல்லாம் வீரர்கள் ஒரே அணியில் இருக்க மாட்டார்கள். அதே காரணத்தால் இப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சில வெற்றிகளை பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். தற்போது அனைத்து வீரர்களிடமும் நாம் நாட்டுக்காக விளையாடுகிறோம் ஒரு தெளிவான கோடு மணலில் இருப்பதாக நான் நினைக்கிறேன்”
கம்பீருக்கு ஆதரவு:
“களத்தில் நாம் நண்பர்கள் இல்லை. களத்திற்கு வெளியே நண்பர்களாக இருப்பது பரவாயில்லை. ஆனால் களத்தில் நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடவில்லை. அந்த அணுகுமுறையை ஆஸ்திரேலிய அணியினரும் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவை அனைத்தும் ஸ்லெட்ஜிங் செய்வதை பற்றியது மட்டுமல்ல”
இதையும் படிங்க: வாழ விடுங்க பாபா.. பெரிய ஐபிஎல் சம்பளத்துக்கு தகுதியற்றவர் என்று விமர்சித்த மஞ்ரேக்கருக்கு.. ஷமி பதிலடி
“வெற்றிக்காக போராடுவது உங்களுடைய எண்ணம் மற்றும் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியும் அதே சூழ்நிலையில் இல்லையெனில் நான் ஆச்சரியப்படுவேன். அந்த அணுகுமுறை இந்த தொடரை சிறந்த தொடராக விளையாட உதவும். அதே அணுகு முறையுடன் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் களத்தில் வெற்றிக்காக போராடுவார்கள் போராடுவதை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார்.



