7 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை விவாகரத்து செய்த மைக்கேல் கிளார்க். காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Kyly-2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணிக்காக 115 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 245 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் தான் ஒரு சிறந்த வீரர் எனபதை நிரூபித்த கிளார்க் குடும்ப வாழ்க்கையில் சறுக்கலை சந்தித்துள்ளார்.

kyly

- Advertisement -

கிளர்க்கின் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் கிளார்க் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல டிவி தொகுப்பாளரும், மாடலுமான கிலி போல்டி என்பவரை திருமணம் செய்தார். அதன் பின்னர் இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆண்டுகள் தங்களது திருமண வாழ்வை சிறப்பாக நடத்தியவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரிந்தனர். மேலும் ஒரே வீட்டில் தங்குவது என்ற முடிவை கைவிட்டு தனது குழந்தையுடன் வெளியேறிய கிலி விவாகரத்து அப்ளை செய்திருந்தார். மேலும் தனக்கும் தன் குழந்தைக்கும் இழப்பீடும் கேட்டு ஒரு வழக்கினை தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரஸ்பர விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

kyly 1

மேலும் 8 மில்லியன் ஆஸ்திரேலியா மதிப்பிலான பணம் அவர்களுக்கு செட்டில்மெண்ட் ஆக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பிரிந்ததற்கான காரணம் பற்றி அறிக்கையில் அவர்களிருவரும் இனி ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்காது என்றும் தங்களது பிரைவசிக்கா (தனிமை) பிரிந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement