இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் இறுதியாக 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு முயற்சித்து வருகின்றது.
அதனுடைய முதல் படியாகவே சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய ஒருநாள் அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார். அத்துடன் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய அவர் தன்னுடைய தரத்தையும் நிரூபித்தார்.
முட்டாள்தனத்தை செய்யாதீங்க:
அதே போல தென்னாப்பிரிக்க தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி பதிலடி கொடுத்துள்ளார். அதே வேகத்தில் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய அவர்கள் சதமடித்து தங்களுடைய ஃபார்மை மீண்டும் நிரூபித்தார்கள். தொடர்ச்சியாக 2026 புத்தாண்டில் அவர்கள் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்கள்.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா மிகவும் தரமான வீரர்கள் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் தெரிவித்துள்ளார். எனவே 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்காவிட்டால் அது முட்டாள்தனமானதாக முடிவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
தரமான விராட், ரோஹித்:
“அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். இப்போதும் நன்றாக கிரிக்கெட்டை விளையாடும் அவர்களை நிறுத்துவதற்கு எந்த காரணமும் கிடையாது. அவர்கள் இருவருமே அழகாக விளையாடுகிறார்கள். எனவே ஏன் அவர்கள் தொடர்ந்து விளையாடக்கூடாது? அவர்களுடைய சாதனைகளே அவர்களைப் பற்றி பேசும்”
இதையும் படிங்க: சுப்மன் கில் இல்லை.. இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் – மார்க் வாக் கருத்து
“அவர்கள் சில மகத்தான இந்திய அணிகளில் அங்கமாக இருந்துள்ளார்கள். தங்களுடைய அணியை அவர்கள் பேட்டிங்கில் முன்ன்னிறு வழி நடத்தியுள்ளார்கள். எனவே அவர்களை நீங்கள் குறைத்து மதிப்பிடுவது முட்டாள்தனமானதாக இருக்கும் என்பது உறுதியானதாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசி நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடும் ஒருநாள் ஜனவரி 11ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



