டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதிக்கத்தை பெற்றிருந்த வேளையில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உயிர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்த ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரினை சுழற்சி முறையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கான அடுத்த நட்சத்திர வீரர் இவர்தான் : மார்க் வாக்
அப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்ததிலிருந்து ரசிகர்களிடம் இருந்து காணாமல் போன அந்த டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வமும் மீண்டும் அதிகரித்தது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரும் கூட மிகவும் சுவாரசியமாக படு அமர்க்களமான வரவேற்புடன் நடைபெற்று வருகிறது.
இப்படி டெஸ்ட் கிரிக்கெட் மெல்ல மெல்ல கவனத்தை ஈர்த்து வரும் வேளையில் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த மிகப்பெரிய வீரராக மாறப்போவது யார்? என்பது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மார்க் வாக் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அடுத்த நட்சத்திர வீரர்களாக நான் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹாரி புரூக் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை பார்க்கிறேன்.
அதிலும் குறிப்பாக யாஷஸ்வி ஜெயஸ்வாலை தான் நான் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த மிகச் சிறப்பான பேட்ஸ்மேனாக முடிவு செய்கிறேன். ஏனெனில் தற்போது 24 வயதாகும் அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது சராசரி கிட்டத்தட்ட 50 ரன்களை நெருங்கியுள்ளது.
மிகவும் இளமையான பேட்ஸ்மேனான அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் சாம்பியன் வீரராக மாறுவார். அதில் எனக்கு இந்த சந்தேகமும் இல்லை. அதேபோன்று ஜெய்ஸ்வால் மிகத் திறமையான வீரர் என்பதை மற்ற வடிவ போட்டிகளிலும் காண்பித்துள்ளார் என்றும் மார்க் வாக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை விட சுப்மன் கில் இந்த விடயத்தில் ஒரு படி மேலதான் இருக்கார் – யுவ்ராஜ் சிங் பாராட்டு
கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கரியரை துவங்கிய ஜெய்ஸ்வால் இதுவரை இந்திய அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 7 சதம் மற்றும் 13 அரைசதம் என 49 ரன்கள் சராசரியுடன் 2511 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதேபோன்று இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.



