அதுக்காக இதயத்தையே கொடுத்த விராட் கோலி.. சச்சின் மாதிரி இந்தியாவுக்கு அசத்துனாரு.. ஆதர்டன் பாராட்டு

Micheal Atherton
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக விராட் கோலி தம்முடைய உயிரையும் இதயத்தையும் கொடுத்து விளையாடியதாக பாராட்டியுள்ளார்.

மேலும் பேட்டிங் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய 4வது இடத்தில் சுமார் 15 வருடங்களாக விளையாடிய விராட் கோலி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட விராட் கோலி தற்போது ஓய்வு பெற்றுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு என்றும் மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சச்சின் போல கோலி:

இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விரைவில் துவங்குகிறது. இது தான் இந்தியா தங்களுடைய அணியை மீளுருவாக்கம் செய்ய வேண்டிய நேரமாகும். அடுத்ததாக அவர்களுக்காக நம்பர் 4 பேட்டிங் இடத்தில் விளையாடப் போவது யார் என்பது நமக்கு உறுதியாகத் தெரியாது”

“நீங்கள் அதைப் பரிதாபமான நபராக பின்பற்ற வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் 15 வருடங்களாக விராட் கோலி விளையாடினார். அவருக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் அங்கே விளையாடினார். விராட் கோலி விளையாடும் போது நீங்கள் உங்களுடைய கண்களை அவருடைய ஆட்டத்தின் மீதிருந்து நகர்த்த முடியாது. அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் இதைத்தான் நான் உணர்ந்தேன்”

- Advertisement -

ஆதர்டன் பாராட்டு:

“அவருடைய ஓய்வுக் குறிப்பில் டெஸ்ட் கிரிக்கெட் தமக்கு கொடுத்த சவால்கள் பற்றி குறிப்பிட்டிருந்தது எனக்குப் புலப்பட்டது. இதுவரை விளையாடிய 123 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு நாளும் அவர் விளையாடுவதை நானும் விரும்பினேன். அவர் தனது இதயத்தையும் ஆன்மாவையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஈடுபடுத்தினார். அந்த ஆற்றலும் ஆர்வமும் ஒருபோதும் மங்கவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலியை ஆரம்பத்தில் பிடிக்காது.. பின்னர் நாங்க நெருங்கிய நண்பர்களாக மாற இதுவே காரணம் – ஏ.பி.டி பேட்டி

இதைத் தொடர்ந்து விராட் கோலி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். அதைத் தவிர்த்து இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாட உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 2027 உலகக் கோப்பையே அவருடைய கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement