இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் மிடில் ஆடரில் விளையாடி தடுமாறினார். அதே போல 2007ஆம் ஆண்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாகவே விளையாடி வந்தார்.
அப்படிப்பட்ட நிலையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் தோனி அவரை துவக்க வீரராக களமிறக்கினார். அது இறுக்கமாக பிடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய ரோகித் நாளடைவில் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்கள் அடித்து மேட்ச் வின்னராக உருவெடுத்தார். குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் மட்டும் மிரட்டலாக பேட்டிங் செய்து அவர் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார்.
வேடிக்கையான கேரியர்:
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடத் துவங்கிய ரோஹித் 2021 லண்டன் ஓவல் போட்டியில் சதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். இதற்கிடையே 5 கோப்பைகளை வென்றதால் இந்தியாவின் கேப்டனாகும் பொறுப்பு அவருக்கு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற தலைமையில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருக்கும் அவரை பிசிசிஐ அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாகவே ரோஹித் ஓய்வு பெற்றுள்ளார்.
ஆதர்டன் கருத்து:
இந்நிலையில் ரோஹித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவை ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக மக்கள் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மிகச் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக செல்வார் இல்லையா?”
இதையும் படிங்க: 6க்கு 5 தோல்வி.. மோசமான காம்பினேஷனில் சிக்கிய ரோஹித் ரிட்டையரானதில் ஆச்சர்யமில்ல.. மைக்கேல் ஆதர்டன்
“ஆனால் அவருடைய டெஸ்ட் கேரியர் வேடிக்கையானது. அவரது கேரியர் 2 பகுதிகளாக இருந்தது. ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய அவர் நீண்ட காலம் காத்திருந்தார். பின்னர் துவக்க வீரராக விளையாடிய அவர் 40 என்ற பேட்டிங் சராசரியுடன் (40.57) கேரியரை முடித்துள்ளார். அந்த கேரியரில் அவர் டஜன் (12) சதங்களை அடித்துள்ளது வெற்றிகரமான ரெக்கார்டாகும். ஆனால் அது ஒரு நட்சத்திர ரெக்கார்டை கொண்ட கேரியர் கிடையாது” எனக் கூறினார்.