சுயநலமில்லாமல் விராட் கோலி எடுத்த இந்த முடிவு பாராட்ட வேண்டிய ஒன்று – மைக்கல் வாகன் கருத்து

vaughan
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஐசிசி நடத்தும் கோப்பைகளை மட்டும் கைப்பற்றவில்லை என்ற ஒரு குறை மட்டுமே அவரிடம் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக செயல்பட உள்ள கோலி அதன் பிறகு டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

Kohli-1

- Advertisement -

அவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பி.சி.சி.ஐ-யின் தலைவரான கங்குலி கூட அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் : விராட்கோலி அணியின் எதிர்காலத்தை கணக்கில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளதால் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் விராட் கோலியின் இந்த கேப்டன் பதவி விலகல் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் : விராட் கோலியின் இந்த முடிவு முழுவதுமாக சுயநலமற்ற ஒன்றாகும். அணியின் நலனுக்காக அவர் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்ட வேண்டிய ஒன்று என்று கூறியுள்ளார்.

vaughan

அனைத்து அழுத்தங்களில் இருந்தும் சிறிது ஓய்வு எடுக்க உங்களுக்கு அது நல்ல இடத்தை அளிக்கும் என்றும் விராட் கோலி எடுத்த இந்த முடிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவி விலகியதை அடுத்து அதற்கடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Kohli

ஏனெனில் விராட் கோலி அவ்வப்போது ஓய்வு எடுக்கும்போது இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்படுவார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் ஐந்து முறை கோப்பையை வென்ற ரோகித்சர்மா ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக மாற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்து வந்ததால் நிச்சயம் விராட் கோலி பதவி விலகியதும் அடுத்து புதிய கேப்டனாக ரோகித் சர்மா பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement