அடுத்த வருட ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இந்த வீரரை வாங்க அதிக போட்டி இருக்கும் – மைக்கல் வான் பேட்டி

- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐ.பி.எல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் முடிந்த தொடரோடு சேர்த்து 13 வருட ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. அடுத்த வருட தொடருக்காக மிகப்பெரிய ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது இருந்தே தயாராகி வருகின்றன. 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும் அதிகபட்சம் 5 வீரர்களை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் போன்ற பல விதிகள் இருக்கிறது. இதனைத் தாண்டி வெளிநாட்டு வீரர்களை எடுப்பதில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கவனமாக இருப்பார்கள்.

ipl trophy

- Advertisement -

அப்படி கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டவர் கிளன் மேக்ஸ்வெல். ஆனால் வருடவருடம் ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் வானவேடிக்கை காட்டுவார் என்று எதிர் பார்க்கும் ரசிகர்களுக்கு எல்லாம் அவர் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வருடம் 13 போட்டிகளில் விளையாடி அதிக பட்சமாக 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதில் ஸ்ட்ரைக் ரேட் 100 என்பது இன்னும் மோசமான செய்தி.

அப்படி ஆடிய மேக்ஸ்வெல் திடீரென தனது ஆஸ்திரேலிய அணிக்காக ஆடும் போது அடித்து துவம்சம் செய்தார். மூன்று போட்டிகளில் 167 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். இதன் ஸ்ட்ரைக் ரேட் 200. முதல் போட்டியில்19 பந்துகளில் 45 ரன்களும் இரண்டாவது போட்டியில் 29 பந்துகளில் 63 ரன்களும் மூன்றாவது போட்டியில் 38 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். பந்துவீச்சிலும் ஒரு விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அடுத்த வருடம் கிளன் மேக்ஸ்வெல் எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் போட்டி போடும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன். இதுகுறித்து அவர் கூறுகையில் : மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரரை எந்த அணியும் விட்டுக் கொடுக்காது. அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் அவரை எடுக்க பல போட்டிகள் ஏற்படும் அவரிடம் பல திறமைகள் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் மைக்கேல் வாகன்.

Maxwell

வழக்கம்போல் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ரசிகர்களின் சுவாரசியத்தை அதிகப்படுத்த அடுத்த ஆண்டு இன்னும் 2 புதிய அணிகளோடு மொத்தம் 10 அணிகள் அடுத்த வருட தொடரில் இடம்பெறும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement