இப்படி ஒரு மாற்றத்தை ஏன் செய்யனும்? மீண்டும் இந்திய அணியை வம்பிற்கு இழுத்த – மைக்கல் வாகன்

Michael-Vaughan and IND Team
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகித்த இந்திய அணியானது நேற்றைய மூன்றாவது போட்டிக்கு முன்னர் அணியில் சில மாற்றங்களை செய்யும் என்று கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்திருந்தார். அதன்படி நேற்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், ஹார்டிக் பாண்டியா ஆகிய நான்கு வீரர்கள் மாற்றப்பட்டனர்.

Team India IND vs ENg

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த மாற்றங்களை செய்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அறிவித்தார். அதன்படி இந்த மூன்றாவது போட்டியில் நான்கு மாற்றங்களை செய்த இந்திய அணி முதலாவதாக பந்து வீசி 215 ரன்கள் விட்டுக் கொடுத்தது.

பின்னர் சேசிங் செய்து விளையாடிய இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் 117 ரன்கள் எடுத்து கைகொடுக்க மற்ற வீரர்கள் அவருக்கு துணை நிற்காததால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பார்மில் இருந்த வீரர்களுக்கு பதிலாக களமிறங்கிய அனுபவமற்ற இளம் பந்துவீச்சாளர்கள் அதிகளவு ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

இந்நிலையில் இந்திய அணி செய்த இந்த மாற்றங்கள் தேவையில்லாதது என்றும், இந்த மாற்றங்களினால் தான் இந்திய அணி தோல்வியை சந்தித்தது என்றும் விமர்சித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் மூன்றாவது போட்டியில் மாற்றங்களை கொண்டு வந்தது.

- Advertisement -

இந்திய அணியின் இந்த முடிவு எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் புவனேஸ்வர் குமார் இல்லாததால் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அதே போன்று சிறப்பான ஃபார்மில் இருக்கும் பாண்டியா, பும்ரா ஆகியோர் அணியில் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது. ஒரு தொடரில் முன்னணி வீரர்கள் அதுவும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது சரியான நடைமுறை அல்ல.

இதையும் படிங்க : IND vs ENG : ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் – அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த வீரர்கள் – வரலாற்று புள்ளிவிவரம் இதோ

காயம் ஏற்பட்டாலோ அல்லது போதிய போட்டிகளை தாண்டி அவர்கள் அதிக போட்டிகளில் விளையாடினாலோ அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இந்த மாற்றங்களை இந்திய அணி ஏன் செய்தது என்று புரியவில்லை. இந்த மாற்றங்கள் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என மைக்கேல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement