இந்திய அணியை கலாய்த்த அதே வாயால் பாராட்டிய மைக்கல் வாகன் – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Vaughan
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், அந்த அணியின் வேகப் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என்று அனைவரும் கருத்து கூறியிருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர் இந்திய அணியின் வீரர்கள். இந்நிலையில் இந்திய வீரர்களின் நேற்றைய ஆட்டத்தைக் கண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாஹன், இந்திய அணியைப் பற்றி பாரட்டி பேசியுள்ளார்.

gill

- Advertisement -

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், நேற்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருக்கின்றனர். ஏஜஸ் பவுல் மைதானமானது பேட்டிங் ஆடுவதற்கு கடினமான மைதானம் என்பதால் ஐந்து வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் பௌலிங் அட்டாக்கை சிறப்பாக எதிர் கொண்ட இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் குவித்து அசத்தினர்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோஹ்லியும், ரஹானேவும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து நாட் அவர் பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கடினமான ஆடுகளத்தில்கூட சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியிருக்கிறது என்று கருத்து கூறியுள்ளார் மைக்கேல் வாஹன்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியைப் பற்றிய கருத்து கூறிய அவர்,
சௌத்தாம்டன் மைதானத்தின் கடினமான சூழ்நிலையிலும் இந்திய அணியானது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த மைதானத்தில் 225 ரன்களே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டபோது, நியூசிலாந்து அணியிடம் இருந்து இந்திய அணியை மழை காப்பாற்றிவிட்டது என்று நக்கலாக கருத்து கூறி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியிருந்தார் மைக்கேல் வாஹன். தற்போது இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை கண்ட அவரே, இந்தியாவை பாரட்டி ட்வீட் செய்திருப்பதை கண்ட இந்திய ரசிகர்கள் அதே ட்விட்டர் பக்கத்தில் அவரை கலாய்த்தும் வருகின்றனர்.

Advertisement