அவரு ஆடியிருந்தா இங்கிலாந்து தான் ஜெயிச்சிருக்கும்.. தோற்ற பின்னரும் கதறும் மைக்கல் வாகன் – விவரம் இதோ

Michael Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இருந்திருந்தா இங்கிலாந்து அணி ஜெயிச்சிருக்கும் : மைக்கல் வாகன்

அதே வேளையில் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி ஐந்தாவது போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் இந்த தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வி இங்கிலாந்து அணிகளின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடி இருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் இல்லாததுதான் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்க காரணம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இந்த கடைசி போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயம் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மிகப்பெரிய பங்கு அவருக்கு உள்ளது. அவரது மனநிலை எப்பொழுதுமே அணிக்கு பெரிய பாசிட்டிவாக அமைந்துள்ளது.

- Advertisement -

சாத்தியமற்ற பல போட்டிகளை அவர் இங்கிலாந்து அணிக்காக வெற்றி பெற்று கொடுத்துள்ளார். இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஒரு நல்ல பாட்னர்ஷிப் மட்டுமே இறுதியில் தேவைப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அனுபவ வீரர் இல்லாதது தோல்விக்கு காரணமாக மாறியது.

இதையும் படிங்க : முதல் ஆசிய வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

ஸ்டோக்ஸ் மட்டும் கடைசி போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியா நம்பிக்கை இழந்து இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருக்கும் என மைக்கல் வாகன் கூறினார். இப்படி இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்த பிறகும் இந்திய அணியை மட்டம் தட்டும் வகையில் மைக்கல் வாகன் பேசியுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement