இப்போ இருக்குற இந்திய அணியை அந்த டீமால் மட்டும் தான் வீழ்த்த முடியும் – மைக்கல் வாகன் கருத்து

Vaughan
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையறுதி போட்டியானது நாளை மார்ச் 4-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது துபாய் கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியை அவங்களால் மட்டுமே வீழ்த்த முடியும் : மைக்கல் வாகன்

லீக் சுற்று போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு சென்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று பலரும் கூறிய வருகின்றனர். ஏனெனில் லீக் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணி பலமான அணியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் துபாய் மண்ணிலேயே மட்டுமே விளையாடி வரும் அவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரையறுதி போட்டியில் மட்டுமில்லாமல் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் திறனுடைய ஒரே அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய அணியை யாரால் தோற்கடிக்க முடியும் என்று என்னிடம் கேட்டால் என்னை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியால் மட்டும்தான் தற்போதுள்ள இந்திய அணியை வீழ்த்த முடியும்.

- Advertisement -

ஏற்கனவே துபாய் ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி எதிர்வரும் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடும் என்பதனால் துபாய் ஆடுகளத்தில் வைத்து ஆஸ்திரேலியா இதை செய்ய முடியுமா? என்று கேட்டால் சந்தேகமாக தான் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : செமி பைனல்ல வருண் சக்ரவர்த்தி ஆடியே ஆகினும்.. காரணத்தை கூறிய ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

ஏற்கனவே இந்த தொடரில் சரியான நேரத்தில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளதால் இந்திய அணியே இந்த தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement