மாலத்தீவில் டேவிட் வார்னருடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர் – நடந்தது என்ன ?

Slater
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் சீசன் ஆனது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் நோய் பரவல் தற்போது நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு கொண்டிருப்பதால் இந்த தொடரை தள்ளி வைத்த பிசிசிஐ நிர்வாகம் எஞ்சியுள்ள போட்டிகளை வெளிநாட்டில் நடத்தலாம் என்று திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்த வெளிநாட்டு வீரர்கள், ஊழியர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரையும் பத்திரமாக நாடு திருப்பும் பணியில் ஈடுபட்டது.

williamson

- Advertisement -

அதன்படி ஒவ்வொரு நாட்டு வீரர்களையும் பத்திரமாக அனுப்பி வைத்த பிசிசிஐக்கு ஆஸ்திரேலிய வீரர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க சிக்கலை சந்தித்தது. ஏனெனில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்கள் மே மாதம் 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். இதன்காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என 38 பேர் கொண்ட குழுவினை பிசிசிஐ முதலில் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது.

மேலும் சில நாட்கள் அங்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் அவர்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து மாலத்தீவில் சென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான மைக்கேல் சிலேட்டர் என்பவரும் மாலத்தீவில் உள்ள மது பாரில் மோதிக் கொண்டதாக ஒரு செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தன.

Slater 2

முதலில் அவர்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது என்றும் பின்னர் அது கைகலப்பாக மாறியது என்றும் சொல்லப்பட்டது. இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவ தற்போது அந்த செய்தி குறித்து மைக்கேல் சிலேட்டர் கூறுகையில் : நானும் டேவிட் வார்னர் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் சண்டை வருவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. இது மாதிரி தகவல் எங்கிருந்து தான் வருகிறது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

slater 1

அதே போன்று இந்த செய்தியை மறுத்து பேசிய வார்னர் : இது மாதிரியான தகவல்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. உறுதியான ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றாலும் இணையத்தில் இவர்கள் மோதல் குறித்த செய்தி வெளியாகி வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement