இந்த ஒருவிஷயத்தில் தோனியைப்போல கெட்டிக்காரர் வேறுயாருமில்லை – மைக்கல் ஹஸ்ஸி புகழாரம்

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தான் ஒரு மிகச்சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்த தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

MS Dhoni vs MI

- Advertisement -

ஆனால் தற்போது 40 வயதினை தொட்ட அவர் தற்போதும் முன்னணி பவுலர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தைச் செலுத்தி இன்னமும் தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்து கொண்டுதான் இருக்கிறார். அதற்கு உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார்.

அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்தில் கடைசி ஓவரின் 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது சென்னை அணி எப்படி வெற்றி பெறும்? என்று அனைவரும் யோசித்தனர். ஆனால் அந்த நேரத்திலும் கூலாக இருந்த அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்து தான் ஒரு சிறந்த மிகச்சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்து காட்டியிருந்தார். இதன்காரணமாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹஸ்ஸி சேஸிங்கின் போது தோனியின் வியூகம் குறித்து சில கருத்துகளை வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

MS Dhoni Finisher

எப்போது சென்னை அணி பதட்டமான சேசிங்கை எதிர்கொண்டாலும் தோனி அதனை மனதளவில் கணக்கீடு செய்து அதன்படி சரியாக இலக்கை நோக்கி அழைத்துச் செல்வார். தோனி மிகவும் சுவாரசியமான ஒரு நபர். ஏனென்றால் ஆட்டத்தின் போது எப்படி அந்த ஆட்டம் நகர்கிறது? நாம் எவ்வாறு அந்த ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்? எப்படி சென்றால் வெற்றி நமக்கு கிட்டும்? என்ற அனைத்தையும் மனதளவில் அவர் கணக்கிடக்கூடியவர்.

- Advertisement -

மேலும் நான் அவருடன் விளையாடும்போது நிறைய முறை பேட்டிங் செய்யும்போது பேசியிருக்கிறேன். அப்போது ரன்ரேட் அதிகரிக்கும் வேளையில் நான் இனி விரைவாக அடிக்க வேண்டும் என்று சொன்னாலும் அவர் என்னிடம் கூலாக : கவலைப்பட வேண்டாம் அவர்கள் இன்னும் பந்துவீச போகிறார்கள். எங்கு பந்து வீசுவது என்று அவர்களுக்கு தெரியாமல் குழப்பம் அடைவார்கள். அப்போது நாம் இலக்கை நோக்கி செல்லலாம். அதுவரை பொறுமையாக இருந்து இறுதியில் அடிக்கலாம் என்று கூறுவார்.

இதையும் படிங்க : எத்தனையோ பினிசெர்கள் வந்தாங்க போனாங்க, ஆனா தல தோனி போல வருமா – முன்னாள் வீரரின் பாராட்டு

இப்படி கடைசிவரை செய்ய வேண்டிய அனைத்தையும் முன்கூட்டியே கணித்து விடுவார். அதே போன்று அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவர் இறுதிவரை நின்றால் நிச்சயம் வெற்றி என்பதை அவர் இன்றளவும் உறுதி செய்து சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என மைக்கல் ஹஸ்ஸி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement