ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக பெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த ஹஸ்ஸி – தோனிக்கே இடமில்லையாம்

Hussey
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார்கள். அப்படி ஓய்வு நேரத்தில் இருக்கும் வீரர்கள் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் தங்களது கருத்துக்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.#

- Advertisement -

அந்தவகையில் தற்போது முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹசி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய அணிகளில் சிறந்த வீரர்களை எடுத்து சிறந்த லெவன் எதிரணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹசி இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2005 முதல் 2013ஆம் ஆண்டுகள் வரை அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

44 வயதான அவர் தனக்கு எதிராக விளையாடிய அணிகளில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஒரு சர்வதேச திறமையான அணியை தேர்வு செய்துள்ளார். இதில் தொடக்க வீரர்களாக விரேந்தர் சேவாக் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மூன்றாவதாக பிரெயன் லாராவும் நான்காவதாக சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவதாக விராட் கோலியும் தேர்வு செய்துள்ளார்.

ஆல்-ரவுண்டராக தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் விக்கெட் கீப்பராக, இலங்கையின் குமார் சங்ககாரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளராக தென்னாப்பிரிக்காவில் டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல் மற்றும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தேர்வு செய்துள்ள அவர், சுழற்பந்து வீச்சாளராக முத்தையா முரளிதரன் ஒரே ஒருவரை மட்டும் தேர்வு செய்துள்ளார்.

Sangakkara

ஹசி தேர்வு செய்த சிறந்த எதிரணி லெவன்: விரேந்தர் சேவாக், கிரேம் ஸ்மித், பிரைன் லாரா, சச்சின், விராட் கோலி, ஜாகஸ் காலிஸ், குமார் சங்ககரா, டேல் ஸ்டைன், மார்னே மார்கல், ஜேம்ஸ் ஆண்டர்சன், முத்தையா முரளிதரன்.

Advertisement