தோனியா ? பாண்டிங்கா ? யார் சிறந்த கேப்டன். உண்மையை மறைக்காமல் கூறிய – மைக்கல் ஹஸ்ஸி

Hussey
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள் தான் பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்காகவும், தோனி இந்திய அணிக்காகவும் வெற்றிகரமான கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரின் தலைமையில் இந்திய அணியும் சரி, ஆஸ்திரேலிய அணியும் சரி சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.

Ponting

- Advertisement -

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அந்த காலத்தில் வீழ்த்த முடியாத அணி என்ற பெயரைப் பெற்று வலம்வந்தது. அதன் காரணமாக 2003ம் ஆண்டு மற்றும் 2007 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இரு முறை 50 ஓவர் உலககோப்பையை வென்று அசத்தியது. அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தது.

அதேபோல இந்திய அணியின் கேப்டன் தோனியும், கங்குலி உருவாக்கிய அந்த அணியை வெற்றி கரமாக அணியாக வழிநடத்திக் கொண்டு சென்றார். மேலும் டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று விதமாக கோப்பையிலும் இந்திய அணிக்காக பெற்று தந்த ஒரே ஒரு கேப்டன் தோனிதான் ஆகையால் தோனி மற்றும் பாண்டிங் ஆகிய இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்களில் மட்டுமல்லாது சிறந்த கேப்டன்களில் என்பதிலும் சந்தேகமே கிடையாது.

Dhoni

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹஸ்ஸியிடம் யார் இவர்கள் இருவரில் சிறந்த கேப்டன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹஸ்ஸி கூறுகையில் : இவர்கள் இருவருமே சிறந்த கேப்டன்களிள் தான் இருவரில் யார் சிறந்தவர் என் அது என்று சொல்வது மிகவும் கடினம் .இருவருமே வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர்கள்.

- Advertisement -

தோனி களத்திலும் சரி, வெளியிலும் சரி மிக அமைதியாகவும் கூலாகவும் காணப்படுவார். அதிகமாக பேசமாட்டார், கோபப்பட மாட்டார் அவர் பேசினால் அனைவருக்கும் பயனுள்ள வகையிலேயே பேசுவார். மற்றபடி மற்ற எல்லோருடைய பேச்சையும் உன்னிப்பாக கவனிப்பார்.ஆனால் பாண்டிங் இந்த கருத்திற்கு அப்படியே நேர்மையானவர். களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார்.

ponting

போட்டி மனப்பான்மை அவரிடம் அதிகம், பீல்டிங் செய்யும் போதும் சரி, பயிற்சி செய்யும் போதும் சரி பெஸ்ட் ஆஃ செயல்பட வேண்டும் என்று நினைப்பார். அதேபோல வலைப்பயிற்சியில் கூட சிறப்பாக பேட்டிங் முயற்சிப்பார். இருவருமே வித்தியாசமான அணுகு முறைகளை கொண்டவர்கள் ஆனால் அருமையான கேப்டன்கள் எனவே இருவரில் ஒருவரை தெரிவு செய்வது கடினம் என்று தனது பதிலை பொதுவாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement