ஐ.பி.எல் போட்டிகளில் நான் வர்ணனையாளராக செயல்படாததன் காரணம் இதுதான் – மைக்கல் ஹோல்டிங் பேட்டி

Holding
- Advertisement -

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ரசிகர்களிடமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெவ்வேறு நாட்டு அணிகளுக்காக விளையாடும் சிறந்த வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் ஒரே அணியில் விளையாடுவது இத்தொடருக்கான சிறப்பம்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர்களில், தான் ஏன் வர்ணனையாளராக செயல்படவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங்.

Ganguly-ipl

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த மைக்கேல் ஹோல்டிங் தற்போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வர்ணனை செய்ய அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே வர்ணனையாளராக செயல்படுவார். தற்போது அவரிடம் ஒரு தனியார் வலைதளம் பேட்டியெடுத்துள்ளது.

அந்த பேட்டியில் ஐபிஎல் தொடரில் நீங்கள் ஏன் வர்ணனையாளராக செயல்படுவதில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, நான் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே வர்ணனை செய்ய விரும்புகிறேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். டி20 போட்டிகள் என்பது உண்மையான கிரிக்கெட்டே கிடையாது என்பது தான் அவருடைய கருத்தாக இருக்கிறது. அதனால் 20 ஓவர்கள் கொண்ட போட்டிகள் நடைபெறும் தொடரான ஐபிஎல்லும் அவரைப் பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் தொடரே இல்லை என்பதாகத் தான் தெரிகிறது.

Holding

முதன் முதலில் டி20 போட்டிகளை ஐசிசி அறிமுகப்படுத்தியபோது, இது மாதிரியான போட்டிகளினால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும் என்று கருத்து கூறிய நபர்களில் மைக்கேல் ஹோல்டிங்கும் ஒருத்தர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர் தனது சொந்த அணியான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களையும் சரமாரியாக விமர்ச்சித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களில் பலபேர் தனது சொந்த அணிக்காக விளையாட விரும்பதில்லை.

Wi

ஆறு வாரங்கள் விளையாடினால் பல கோடி ரூபாய்கள் கொடுக்கும் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவே விரும்புகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியானது டி20 உலக கோப்பைகளை கைப்பறியிருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு கிரிக்கெட்டே கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றியிருக்கும் அந்த அணிதான் தற்பொது வரை நடப்பு சாம்பியனாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement