- Advertisement -
ஐ.பி.எல்

அதோட கிங் தோனி இல்லனா பெரிய லாஸ்.. 2026இல் ரோஹித், கோலியுடன் விளையாடனும்.. மைக்கேல் கிளார்க்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று முடிந்தது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு வழியாக 17 வருடங்கள் கழித்து முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தம்முடைய 18வது முயற்சியில் ஒரு வழியாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த வருடம் தோனி விளையாடுவாரா? என்பது கேள்வியாக காணப்படுகிறது.

- Advertisement -

தோனி தான் கிங்:

விரைவில் 45 வயதை தொடவிருக்கும் அவரிடம் அடுத்த வருடம் விளையாடுவீர்களா? என்று 2025 ஐபிஎல் தொடரின் முடிவில் கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் 3 – 4 மாதங்கள் கழித்து உடல் நிலையைப் பொறுத்து அது பற்றி முடிவெடுக்க உள்ளதாக தோனி கூறினார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தான் சிஎஸ்கே அணியின் கிங் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளியூர் மைதானங்களில் மற்ற வீரர்களைக் காட்டிலும் தோனிக்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். தோனி ஓய்வு பெற்றால் அது சென்னை அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த வருடம் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரைப் போல தோனியும் வந்து ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

- Advertisement -

2026இல் கண்டிப்பா வரணும்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். எம்எஸ் தோனி மிகப்பெரியவர். ஒவ்வொரு முறையும் சென்னை அணி வெளியூரில் விளையாடும் போது எதிரணிகளைக் காட்டிலும் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்

இதையும் படிங்க: இதுமட்டும் நடந்தா விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவாரு – மைக்கல் கிளார்க் கருத்து

“தோனி இருப்பதாலேயே ஐபிஎல் தொடருக்கு நிறைய ஸ்பான்சர்கள் உள்ளார்கள். தோனி இருப்பதாலேயே அங்கு நிறைய ரசிகர்களும் வருகிறார்கள். அவர் சிஎஸ்கே அணியின் கிங். அவர் தொடர்ந்து விளையாடுவதை சிஎஸ்கே அணி விரும்புகிறார்கள். மக்கள் தோனியின் தாக்கத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தோனி ஓய்வு பெறும் போது அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்” என்று கூறினார்.

- Advertisement -